‘ட்ரோல் செய்கிற கண்மணிகளே… அது என் பள்ளி தான்!’ மதுவந்தி ஆவேச வீடியோ

Sexual Harassment Case : பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியல் மீதான பாலியல் புகார் குறித்து நடிகையும் ஒய்.ஜி மகேந்திரனின் மகளுமான மதுவந்தி விளக்கம் அளித்துள்ளர்.

சென்னை கே.கே நகரில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபலானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் பொருளாளராக உள்ள நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மக்ள் மதுவந்தி ஆகியோரை நெட்டிசன்கள் கடுமையாக வலைதளங்கியில் டரோல் செய்துவருகின்றனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,

வணக்கம் நான் மதுவந்தி பேசுகிறேன். இப்போ சமீபத்துல நடந்துள்ள ஒரு பயங்கரமான.. அசிங்கமான ஒரு நிகழ்வு. பத்மா சேஷாத்திரி பள்ளியில் படிக்கக்கூடிய ஒரு மாணவி, அங்கு இருக்கக்கூடிய ஒரு ஆசிரியர் ராஜகோபால் என்பவரை பற்றி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அது ஒரு வலிமையான குற்றச்சாட்டு மற்றும் புகார். இந்த புகார் பற்றிய விவரங்கள் எங்களுக்கு வந்துது. எனக்கும் என் தந்தை Y.G.மகேந்திரனுக்கும் வந்தது. என் தந்தை  ஒய்.ஜி.மகேந்திரா பள்ளியின் நிர்வாகி கிடையாது.

அவர் அந்த பள்ளியை நிர்வகிக்கவில்லை. அவர் பள்ளியின் ஒரு பொருளாளர் மட்டுமே. இது தொடர்பான தகவல் அவருக்கு வந்த கையோடு,  அவர் ஒரு வலிமையான இ-மெயிலை பள்ளியின் டீன், நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக பொறுப்பில் உள்ள அனைவருக்கும் என்னுடைய அப்பா அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர் அந்த விண்ணப்பத்தில் சொல்லியிருக்கிறார். முக்கியமான விஷியம் என்னவென்றால், என்னுடைய பாட்டி ஒய்.ஜி.பி ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி வளர்த்துவிட்ட மாபெரும் ஸ்தாபனம் இது. அவரின் பெயருக்கோ இல்லை இந்த ஸ்தாபனத்துடைய பாரம்பரியத்துக்கோ, எந்த கலங்கமும் வரக்கூடாது. அப்படி வந்தால் நாங்கள் சும்மாயிருக்க மாட்டோம். இதுதான் முதல்ல நான் சொல்லிக்க விரும்புகிற ஒரு விஷயம்.

என்னை ட்ரோல் பண்ற கண்மணிகளுக்கு, ஆம், இது என் ஸ்கூல் தான். ஏனெனில் இது நான் படித்த பள்ளி, ஆனால் நான் நடத்துகிற பள்ளியல்ல. என்னை போல எத்தனையோ எத்தனையோ ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்திருக்கிறார்கள். தேர்வாகி வெளியே  சென்றிருக்கிறார்கள். இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது எங்க எல்லாருடைய பள்ளியும்தான். அதனால் இது ஒரு அசிங்கமான விஷயம். இதற்கு சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தோ எனக்கும் என் தந்தைக்கும் கிடையாது. இதைதான் நாங்கள் சொல்லவே சொல்லியிருக்கிறோம்.

இதில ஜாதி, மதம், இனம் பிராமணியம், சத்ரியா, வைஷியா, சூத்ரா, ஹிந்து, முஸ்ஸீம், கிறிஸ்தவம், ஜைணம், சீக்கியம் இந்த மாதிரி தப்பான அரசியலை தயவுசெய்து புகுத்தி விளையாடாதீர்கள். அரசாங்கத்திடம் நான் கேட்டுக்கொள்வது, இதில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்குறீர்களோ அதுக்கு முழு ஒத்துழைப்பு எங்கள் குடும்பத்தின் சார்பாக நாங்கள் கண்டிப்பாக கொடுப்போம். நாங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டிதான் கேட்டிருக்கோம். சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதே சமயம் காழ்புணர்ச்சியினால், சமூகம் மற்றும் மதம் சார்ந்த விளையாட்டு அரசியலை தயவு செய்து செய்யாதீர்கள். நடப்பது என்வென்று நாங்கள் பார்க்கப்போகிறோம். அதுவரைக்கும் நாங்கள் சும்மா இருக்க போவதில்லை. கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டுக்கிட்டே தான் இருக்கோம். இது ஒரு பெண்ணின் வாழ்க்கை தொடர்பான குற்றச்சாட்டு. பலர் சேர்ந்து எழுப்பிய இந்த குரலுக்கு பள்ளி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கும் என என் பாட்டியின் பேத்தியாகவும் பள்ளியின் முன்னாள் மாணவியாகவும் நம்புகிறேன். பாரத் மாதா கீ ஜே!” என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu school teacher arrested sexual harassment case

Next Story
கொரோனா சிகிச்சை: தமிழக மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு எவ்வளவு?tn covid beds, covid hospital beds, tamil nadu, கொரோனா மருத்துவமனைகள், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிலவரம், beds in tamil nadu, covid 19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com