Tamil Nadu Schools, Colleges Holiday Due To Corona Scare: கொரோனா எதிரொலி காரணமாக, தமிழக முதல்வர் பழனிசாமி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் தோன்றிய கோரோனா வைரஸ் பாதிப்புக்கு உலக அளவில் இதுவரை 6,500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அமெரிக்கா, இந்தியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகள் தேசிய பேரிடராக அறிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து கூட்டத்தில் இந்த வைரஸ் வேகமாக பரவும் என்பதால் கூட்டங்கள் கூடும் இடங்களைத் தவிர்க்கும் வகையில் அண்மையில் கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்கள் திரையரங்குகளை மூட உத்தரவிட்டது. அதே போல, அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளார். 10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்று அறிவித்துள்ளார். அதே போல , கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம் என்றும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tamil nadu schools holiday news corona virus outbreak all schools colleges leave till march
பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே… சீரியல் நடிகைக்கு ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆறிலும் உதயசூரியன் சின்னம்
CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு
தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?