Tamil Nadu Schools Holiday News: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஜனவரி 6-ம் தேதி பள்ளிகள் திறக்கின்றன. மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் இதே தேதியில் திறப்பது குறிப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இந்த விடுமுறை முடிந்து ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் அரையாண்டுத் தேர்வு விடுமுறையை பயன்படுத்தி, பள்ளிகளில் வாக்குச்சாவடி அமைத்து 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சீட்டு அடிப்படையில் நடக்கிறது. எனவே 2-ம் தேதி காலையில் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை சில இடங்களில் ஏதாவது காரணங்களால் மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே பள்ளிகள் திறப்பை ஜனவரி 3-ல் இருந்து, 4-ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இந்தச் சூழலில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரையாண்டுத் தேர்வு முடிந்து ஜனவரி 6-ம் தேதி திறக்கப்படும்’ என கூறப்பட்டிருக்கிறது. எனவே பள்ளிகள் திறப்பு மேலும் ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், சுயநிதி தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என கூறப்பட்டது.
முன்னதாக, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் விடுத்த அறிவிப்பில் மெட்ரிக் பள்ளிகளும் ஜனவரி 4-ம் தேதியே திறக்கப்படும் என தெளிவு படுத்தியிருக்கிறது. ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநரகத்திலிருந்து வெள்ளிக்கிழமை வரை தனி அறிவிப்பு எதுவும் இல்லை
இன்றைய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, இதில் க்ளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.