கொரோனா அதிகரிப்பு: தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
tamil nadu shcools leave, schools leave from march 22nd, tamil nadu schools leave for 9th 10th 11th standards, பள்ளிகளுக்கு விடுமுறை, 9 10 11 வகுப்புகளுக்கு விடுமுறை, மார்ச் 22 முதல் பள்ளிகள் விடுமுறை, tamil nadu govt announced leaves, coronavirus, leave announced

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 22ம் தேதி முதல் 9,10,11 வக்குப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

நாட்டில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோன வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறத்.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 9,10,11,12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது.

அண்மையில் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Advertisment
Advertisements

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் டொடர்ந்து, தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamil Nadu Coronavirus Tamil Nadu School Education Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: