கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில் மழைக்காலம் முடிந்தவுடன் அடுத்து வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கடலோர பகுதிகளில், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் தொடர்ந்து மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இதில் வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக னெ்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். ஏற்கனவே கமழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாணவர்களின் பாதுகாப்பு கருதி கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தத்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்து வரும் நிலையில், மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில், மழைக்காலம் முடிந்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரே முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“