தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்ஃபிங்ஸ், அப்ளைடுமெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து ஸ்டாலின் தனது X பக்கத்தில், "சான் பிரான்சிஸ்கோவில் ஒரே நாளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலீடுகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இது சென்னை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 4,100 வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுக்கும்.
இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் முதலீட்டை ஈர்க்கும் வேகம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். அமெரிக்காவில் இருந்து மேலும் அதிக முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்படும். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நமது பயணத்தை முன்னெடுத்து செல்கிறோம்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் மைக்ரோசாஃப்ட்வின் தலைமை அலுவலகத்தை ஸ்டாலின் பார்வையிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“