Tamil Nadu seeks permission to fell trees in Mullaperiyar : சமீபத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கேரளா - தமிழகம் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது கேரள அரசு. அணையை கட்டி அதிக ஆண்டுகள் ஆன நிலையில் பாதுகாப்பற்றதாக உள்ளது. இந்த அணையின் கீழே வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது எனவே தமிழக அரசு இதனை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேரள அரசு மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் அமைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரம். எனவே அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது எந்த வகையிலும் சாத்தியமற்றது. மாறாக அணையை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேரள அரசு உதவ வேண்டும் என்று தமிழக அரசும் கோரிக்கை வைத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாகும். உச்ச நீதிமன்றத்தின் 2014ம் ஆண்டு தீர்ப்பைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 142 அடியாக நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டத்தை 118 அடிகளில் இருந்து உயர்த்த பேபி அணை கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணைக்கு பலத்தை ஏற்படுத்தும் வகையில் பேபி அணை மற்றும் மண் அணையும் அமைக்கப்பட்டுள்ளது. பேபி அணையை பலப்படுத்த மரங்களை வெட்ட அனுமதி கொடுத்து பிறகு மறுத்துவிட்டது கேரள அரசு. அப்படி அனுமதி அளிப்பது கேரள மக்களின் நலனுக்கு எதிராக இருக்கும். மேலும் புலிகள் காப்பகத்தில் அமைந்திருப்பதால் மரங்களை வெட்ட மத்திய அரசின் அனுமதி தேவை என்றும் கூறியது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் அணியை பலப்படுத்தவும் பராமரிப்பு பணிகளுக்காக மரங்களை வெட்டவும் அனுமதி அளிக்குமாறும் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
முல்லைப் பெரியாரில் மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரளா அனுமதி மறுத்தது ஏன்?
கனமழைக்கு பின் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த முல்லைப் பெரியாறு விவகாரம்; இதுவரை நடைபெற்றது என்ன?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.