scorecardresearch

சிங்கப்பூர்- தமிழ்நாடு : 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: கூடுதல் தகவல் இதோ

சிங்கப்பூரில் முதலீட்டார்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சிங்கப்பூர்- தமிழ்நாடு : 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
சிங்கப்பூர்- தமிழ்நாடு : 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிங்கப்பூரில் முதலீட்டார்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முதல்வர் ஸ்டாலின்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில்  முதல்வர் ஸ்டாலின் Temasek, Sembcorp, CapitaLand உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களைச் சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும்,  சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த   எஸ்.ஐ.சி.சி.ஐ  ( Singapore Indian Chamber of Commerce and Industries ) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office – SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூர் இந்தியா கூட்டமைப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாட்டின் ஃபேம் டி.என் (FamTN)  மற்றும் ஸ்டார்ட் ஆப் டி.என் (Startup TN ) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த  மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P International Pvt. Ltd, நிறுவனத்திற்கு இடையே ரூ. 312 கோடி முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், எஸ்.யு.டி. டி ( Singapore University of Technology & Design ) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஐ.டி.இ Education Services நிறுவனத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu signs six mous with singapore

Best of Express