மாநிலம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழ்நாடு செவ்வாய்கிழமை 40.5 மில்லியன் யூனிட் சூரிய மின் உற்பத்தி நுகர்வுகளை பதிவு செய்தது.
”ஏப்ரல் 23 அன்று தமிழ்நாடு எப்போதும் இல்லாத அளவிற்கு, 40.50 MU சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது 13-மார்ச் - 2024 அன்று பதிவு செய்யப்பட்ட 39.90 MU என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இதேபோல், நேற்றைய தின சூரிய மின் உற்பத்தி 5365 மெகாவாட்டும் அதிகமான ஒன்றாகும். 05-மார்ச்-2024 அன்று செய்யப்பட்ட உற்பத்தியே 5398 மெகாவாட், மிக அதிக பட்ச சூரிய உற்பத்தியாகும்”, என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
நிறுவப்பட்ட சூரிய திறன் அதிகரிப்பு மற்றும் நீடித்த பகல்நேரம் உள்ளிட்ட காரணிகள், சூரிய ஆற்றல் உற்பத்தி அதிகரிப்பதற்கு, காரணம் என்று தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“