/tamil-ie/media/media_files/uploads/2019/07/rain.jpg)
Tamil Nadu Southwest Monsoon 2019 Latest Update
Tamil Nadu Southwest Monsoon 2019 Latest Update : இன்று மிதமானது முதல் கனமழை வரை நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதே போன்று சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், காஞ்சி, சென்னை, நாகை, காரைக்கால், ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பதிவான மழை
நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்யத் துவங்கியது. கோவையின் வால்பாறை பகுதில் 10 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லாறு பகுதியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நீலகிரியின் தேவலா பகுதியில் 5 செமீ மழையும், உதகையின் ஜி பஜாரில் 4 செ.மீ மழையும், நடுவட்டம் பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தஞ்சையின் பாபநாசம், கன்னியாகுமரியின் கீழ் கோதையாறு, பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் பதிவாகும்ம். குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.