கொரொனா அறிகுறிகள் தெரிகின்றதா? உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்…

இந்த நோயின் தாக்கத்தை குறைக்க பல நாடுகளும் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Tamil Nadu State Government Announced Coronavirus Helpline Numbers
Tamil Nadu State Government Announced Coronavirus Helpline Numbers

Tamil Nadu State Government Announced Coronavirus Helpline Numbers : தமிழ்நாட்டில் கொரொனா வைரஸ் குறித்து சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் ஏதேனும் பொதுமக்களுக்கு இருந்தால் உடனே இந்த எண்ணுக்கு அழைத்து தங்களின் சந்தேகங்களை கேட்டுக் கொள்ளுங்கள்.

தமிழக உதவி மைய எண்: 044-29510500
மத்திய உதவி மைய எண் : +91-11-23978043
மின்னஞ்சல் : ncov2019@gmail.com

தீவிரம் காட்டும் கொரொனா

கொரொனா வைரஸால் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு தலைவர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஓமனில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிய காஞ்சிபுரத்தை சேர்ந்த எஞ்சினியர் ஒருவருக்கு கொரொனா நோய் தொற்று இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

இந்தியாவில் இந்த நோயால் இதுவரை 81 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் ஒருவரும், 69 வயதான மூதாட்டி ஒருவரும் இந்நோய்க்கு இந்தியாவில் பலியாகியுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த நபர் 1 மாத காலமாக சௌதி அரேபியாவிற்கு புனிதப் பயணம் சென்றுவிட்டு பிப்ரவரி 29ம் தேதி நாடு திரும்பினார். தெலுங்கானாவில் இருந்து கல்புராகி சென்ற அவருக்கு நோயின் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க விரும்பாத உறவினர்கள் அவரை தெலுங்கானா மாநிலத்திற்கு அழைத்து வந்தனர். ஓரிரு நாட்களில் உடல்நிலையில் தேர்ச்சி காணவும் மீண்டும் வடக்கு கர்நாடகாவில் இருக்கும் கல்புராகிக்கு அழைத்து வருகின்ற வழியில் அவர் உயிரிழந்தார்.

மேலும் படிக்க : கொரோனாவுக்கு பலியான முதல் இந்தியர் ; உறவினர்களின் தவறான வழிநடத்துதலால் நிகழ்ந்த சோகம்!

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu state government announced coronavirus helpline numbers

Next Story
இன்றைய செய்திகள்: ஸ்டாலின் தான் இனிமேல் எங்களுக்கு கலைஞர்; பேராசிரியர் – துரைமுருகன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com