Advertisment

150 நாட்களில் ரூ. 4,800 கோடி இழப்பீடு - வேதனையில் போக்குவரத்துக் கழகம்!

மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் அரசு, பொதுப்போக்குவரத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil nadu news today, inter district bus service

பேருந்து போக்குவரத்து

Tamil Nadu State Transport corporation claims Rs 4800 crores as a loss during the lockdown : இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு நிலைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பினும் பொதுப் போக்குவரத்துக்கான சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

Advertisment

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பொதுப்போக்குவரத்து வசதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 22 ஆயிரம் பஸ்கள் 371 பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 150 நாட்களாக பேருந்துகள் எதுவும் ஓடாததால் சாலைவரி கட்டப்படவில்லை என போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :கண்ணாடி கூண்டுக்குள் ஆழித்தேர்… பக்தர்களுக்கு எப்போதும் காட்சி அளிக்கும் வகையில் புது ஏற்பாடு!

நாள் ஒன்றுக்கு 32 கோடி ரூபாய் இழப்பீடு என்று கணக்கிடப்பட்டு 150 நாட்களுக்கு ரூ. 4800 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது இருப்பினும் 5 முதல் 10 நாட்களுக்கு விடுத்து என்ற ரீதியில் கணக்கெடுக்கப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் அரசு பொதுப் போக்குவரத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு 60% பேருந்துகளுக்கு சாலை வரி கட்டுவதற்கான காலக்கெடு முடிந்து உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tnstc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment