Tamil Nadu News: பண்டிகை நாட்கள் நெருங்கும் வேளையில் தமிழக மக்கள் சொந்த ஊரிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய நேரத்தில் சென்னை, கோயம்பத்தூர் போன்ற நகரங்களில் இருந்து தன்னுடைய சொந்த ஊரிற்கு செல்லும் மக்களுக்காக அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, மக்கள் தங்களது சொந்த ஊரிற்கு செல்வதற்காக அரசு சிறப்பு போக்குவரத்து வசதிகளை இயக்கத்தில் விடுவது வழக்கமான ஒன்று.
அதை போல, இந்த முறை அரசு போக்குவரத்து கழகத்தின் http://www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலி வாயிலாக முன்பதிவு செய்து மக்கள் பயணிக்கும்படி செய்திருக்கின்றனர்.
அதோடு, இந்த ஆண்டு வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வாசிகள் தங்களின் சொந்த ஊரிற்கு சென்று திரும்பி வருவதற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ரயில், ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊரிற்கு செல்லும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி பயணிப்பதாக புகார் அளித்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கத்தில் விடுகிறது. தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளதால் மக்கள் தங்களின் பயணத்திற்கு பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமிழக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பு, அதாவது அக்டோபர் 21ஆம்தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அக்டோபர் 22ஆம் தேதி பயணிப்பவர்கள் நாளையும், அக்டோபர் 23ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் நாளை மறுநாள் (செப்டம்பர் 23ஆம் தேதியும்) முன்பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகள் காலம் வரும்பொழுது போக்குவரத்து நெரிசல் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரிப்பது வேதனை அளித்தது. அதனால், நெரிசலை குறைக்கும் விதத்தில் சென்னையில் ஆறு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர்,
தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம்,
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, வேலூர்,ஆற்காடு,திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக இயக்கப்படவுள்ளது.
இதனுடன் தசரா பண்டிகை வருவதனால், திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினத்துக்கு செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரும் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதி வரை, சென்னை,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil