Israeli establishments in Tamil Nadu: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரை அடுத்து, யூதர்களின் குடியிருப்புகள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்களில் பாதுகாப்பை தமிழகம் பலப்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே மலைப்பகுதியில் உள்ள யூதர்கள் குடியிருப்பு மற்றும் மாநிலத்தில் உள்ள பிற இஸ்ரேலிய நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை காவல்துறை தலைமை இயக்குநரும், காவல் படைத் தலைவருமான சங்கர் ஜிவால் உறுதிப்படுத்தினார்.
மாநிலத்தில் உள்ள இஸ்ரேலிய வணிக நிறுவனங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் மாநிலத்தில் உள்ள பிற விமான நிலையங்களில் சமீபத்திய நாட்களில் தரையிறங்கிய இஸ்ரேலிய பிரஜைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் இருப்பிடங்களைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமான நிலையம் மற்றும் குடியேற்ற அதிகாரிகளுடன் போலீசார் தொடர்பு கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலியர்கள் தங்களின் புனித நாளை அனுசரித்துக் கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத தாக்குதல்கள் நடந்துள்ளன.
சனிக்கிழமை (அக்.7) இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்று குவித்தனர்.
இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல்கள் நடத்திவருகின்றனர். இந்தத் தாக்குதலில் இதுவரை 600க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நேதன்யாகு போர் நடப்பதாகவே அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“