தமிழக காவல்துறை டி.ஜி.பி.,யாக இருந்த சைலேந்திர பாபு வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்ற நிலையில், காவல் துறை அதிகாரிகள் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.,யாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிய சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் இன்றுடன் (ஜூன் 30) பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்ற டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நேரில் அழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: ’சமுதாயம் என்னை எப்படி பயன்படுத்த விரும்புகிறதோ அதற்கேற்ப செயல்படுவேன்’: இறையன்பு
இதனையடுத்து காவல்துறை தலைமையகத்தில் சைலேந்திர பாபுவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட சைலேந்திரா பாபு பிரியாவிடை பெற்றார். அப்போது சைலேந்திர பாபுவை காரில் அமர்த்திய காவல்துறை அதிகாரிகள், காரில் கயிறு கட்டி தேர் போல் இழுத்தனர்.
மேலும், அவரின் கார் மீது பூக்கள் தூவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இதனைப் பார்த்து எமோஷ்னல் ஆன லைலேந்திர பாபு கண்ணீருடன் பிரியா விடைபெற்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil