Tamil Nadu Tamil News: தமிழ்நாடு பொதுக் கணக்குக் குழு தஞ்சாவூரில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் அங்குள்ள பழைய பேருந்து நிலையம், அரசு கண்காணிப்பு இல்லம் மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல திட்டங்களை நேற்று ஆய்வு செய்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய குழுவின் தலைவர் செல்வபெருந்தகை, முந்தைய அதிமுக அரசு காலாவதியான மருந்துகளை பயன்படுத்தியதாகவும், அவற்றின் மதிப்பு ரூ. 26.17 லட்சம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “இது ஆடிட்டர் ஜெனரலின் கட்டுப்பாட்டாளர் அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலாவதியான மருந்துகளை பயன்படுத்தியதை கும்பகோணம் மற்றும் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் அதை ஒப்புக்கொண்டனர். ரூ. 26.17 லட்சம் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் 2013-14 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டன, ”என்றார்

முந்தைய அதிமுக அரசின் தவறான நிர்வாகம் செய்துள்ளதை பல அறிக்கைகள் காட்டி வரும் நிணலயில், இதன் விளைவாக பெரும் பணம் வீணானது என்றும், இது சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் “காலாவதியான மருந்துகளால் யார் சிகிச்சை பெற்றார்கள் மற்றும் அவர்கள் சிக்கல்களை உருவாக்கியார்களா என்பதை அறிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“