/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-01T112956.141-1.jpg)
Tamil Nadu Tamil News: கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், "அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்." என்று தெரிவித்தார். அதன்படி, அயல்நாடு, வெளி மாநிலங்களில் தமிழ்மொழியை கற்றுக்கொடுப்பதற்காக தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழ் கற்பிப்பதற்காக வசதியை ஏற்படுத்துதல், இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தருதல், தமிழை அயல்நாட்டு மற்றும் வெளிமாநிலங்களுக்கு கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதி ஒடுக்கப்பட்டுள்ளதாகவும், அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாக கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-03T114030.812.jpg)
அதோடு, அகரம் முதல் சிகரம் வரை பல படிநிலைகளாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு, சான்றிதழ் தேர்வு நடத்தவும் நவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழ் மொழியின் பண்பாடு மற்றும் கலாச்சார பரப்புரை பணிகள் ஒலி - ஒளி உச்சரிப்புடன் பாடப்புத்தகத்தை வடிவமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.