திண்டுக்கல் துப்பாக்கிச் சூடு: இளைஞர் உயிரிழப்பு – மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படை

Youth shot dead in Dindigul with country gun; police formed 5 teams to trace assailants who opened fire Tamil News: திண்டுக்கல்லில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை கண்டுபிடிக்க, போலீஸார் 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

Tamil Nadu Tamil News: youth killed in in Dindigul gun shooting, 5 special teams to trace the assailants 

Tamil Nadu Tamil News: திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மரியநாதபுரம் செட்டிகுளத்தை மீன் குத்தகை எடுத்துள்ளார். இவருடைய மகன் ராக்கி என்கிற ராகேஷ் (26), நேற்று இரவு 1.30 மணி அளவில் செட்டிகுளம் அருகே தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென ராகேஷ் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவரை நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்கள் சேகரிக்கப்பட்டும் வருகின்றன.

இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் காவல் துறை டிஐஜி விஜயகுமாரி, காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தபட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை கண்டுபிடிக்க போலீஸார் 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மீன்பிடி உரிமைக்கான ஏலம் தொடர்பான போட்டியே கொலைக்கு வழிவகுத்திருக்கலாம். மாணிக்கத்தின் மகன் செட்டிகுளம் அருகே தனது நண்பர்களுடன் அமர்ந்து இருப்பதை அறிந்தவர்கள் மட்டுமே குற்றம் செய்திருக்க வாய்ப்புள்ளது.” என மூத்த அதிகாரி ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu tamil news youth killed in in dindigul gun shooting 5 special teams to trace the assailants

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com