Tamil nadu news today updates : நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதே, அரசின் முக்கிய கடமை. அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான நம்பிக்கை ஆகியவையே, இதன் அடிப்படை,'' என, பிரதமர் மோடி பேசினார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
நாடு முழுவதும் ஏப்., மாதம் முதல் பி.எஸ்., 6 ரக எரிபொருள் வினியோகம் செய்யப்படும்,'' என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சேர்மன் சஞ்ஜிவ் சிங் கூறினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சேர்மன் சஞ்ஜிவ் சிங் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 2017 ஏப்ரலில் பி.எஸ்.,(பாரத் ஸ்டேஜ்) 4 ரக எரிபொருள் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வரும் ஏப்., மாதம் முதல் பி.எஸ்., 6 ரக எரிபொருளை எண்ணெய் நிறுவனங்கள் வினியோகம் செய்யவுள்ளன. எரிபொருளில் இருக்கும் 'சல்பர்' அளவுக்கேற்ப காற்றில் மாசுபாடு ஏற்படுகிறது.பி.எஸ்., 2 ரக எரிபொருளில்(பெட்ரோல், டீசல்) காற்றில் இருக்கும் சல்பர் அளவுகோல், 350 பார்ட்ஸ் பெர் மில்லியன்(பி.பி.எம்.,) ஆக இருந்தது.பி.எஸ்., 4 ரக எரிபொருளில், 50 பி.பி.எம்., ஆக சல்பர் அளவு குறைக்கப்பட்டது.பி.எஸ்., 6 ரக எரிபொருளில் சல்பர் அளவு, 10 பி.பி.எம்., ஆக இருக்கும் என்பதால் காற்றின் மாசுபாடு மேலும் குறைக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இன்று உலகில் பல நாடுகள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கவலைகள் தெரிவித்து வருகின்றன. ஆனால், இது ஒரு நாள் கண்டன குரலாக மாறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், குடியுரிமை திருத்தம் சட்டம் அனைத்து மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
மாநிலங்களவையில் போட்டியிடும் உறுப்பினர்களின் பட்டியலை திராவிட முனேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது. திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
*இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிர் இழந்தனர். இந்த வழக்கு இயக்குனர் ஷங்கரிடம் விசாரணை நடைபெற்றது. இதனித் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசானுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னை வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .
நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக கடந்த 12-ம் தேதி இதன் விலை அதிகரித்தது.
டெல்லியில் ரூ.858.50 ஆக ஒரு சிலிண்டரின் விலை ரூ.805.50 ஆகவும் . சென்னையில் ரூ.881 ஆக இருந்த ஒரு சிலிண்டரின் விலை ரூ.826 ஆகவும் உள்ளது.
நாட்டில் இயங்கும் அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் மசோதாவை நாளை பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
பா.ம.க.-வின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், " தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் அவசியம் என்றுய் தெரிவித்தார். மேலும், குடியுரிமை திருத்தம் சட்டத்தால் இஸ்லாமிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, இதை திமுக தவறாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
All it took was one visit of Amit Shah to spread the 'Goli Maaro Saalon Ko' slogan in Kolkata.The followers of Godse might be impressed with 'Goli' but Bengal is the land of Vivekananda, Kazi Nazrul Islam and Tagore. #GoBackAmitShah pic.twitter.com/x5n1RZSSEz— Md Salim (@salimdotcomrade) March 1, 2020ஷாஹித் மினார் மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேரணிக்கு செல்லும் வழியில் பாஜக தொண்டர்கள் 'தேசத்ரோகிகளை என்ன செய்ய வேண்டும், தேசத்துரோகிகளை சுட வேண்டும்' என்ற கோஷங்களை எழுப்பியுள்ளனர் .இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்த சிபிஐ (எம்) தலைவர் முகமது சலீம், இந்த கோஷங்களை பரப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒஉர் பயணம் தான் தேவைப்பட்டது என்று கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற வன்முறை முதல் நாட்டின் பிற பகுதிகளில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்புவோம். மத்திய அரசை அம்பலப்படுத்துவோம். உள்துறை அமைச்சரின் ராஜினாமாவை கோருகிறோம் , இந்த பிரச்சினையையும் கட்டாயமாக எழுப்புவோம் என்று மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்
விருதுநகர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விழாவிற்கு தான் உரிய முறையில் அழைக்கப் படவில்லை என்றும், புறக்கணிக்கப் படுவதாகவும் அம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில்
- டெல்லி கலவரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்
- தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையைக் கைவிட வேண்டும்
- இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
- வெறுப்புப்பிரச்சாரத்தைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“காவல்துறை தனது பணியைச் செய்து வருகிறது…. (டெல்லி) கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நம் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்வதுதான் இந்திய நாட்டின் பலம் என்று தெரிவித்தார்.
தேஷ் கே கடரோன் கோ, கோலி மரோன் சலோன் கோ (நாட்டின் துரோகிகளுடன் என்ன செய்ய வேண்டும்? அவர்களை சுட வேண்டும்) போன்ற கோஷங்களை எழுப்புவது குறித்து கேள்விக்கு பதிலளித்த தாக்கூர், " இதுபோன்ற விஷயங்களை பரப்புவதன் மூலம் ஊடகவியலாளர்கள் 'பொய் சொல்கிறார்கள்' என்றும் தெரிவித்தார்.
ஜனவரி 27 அன்று, ரித்தாலாவில் டெல்லி தேர்தலுக்கான பிரச்சாரத்தில், தாகூர் பல முறை "தேசத் துரோகிகளை என்ன செய்ய வேண்டும் " என்ற கோஷத்தை பல முறை கூறினார், கூட்டத்தில் இருந்த மக்கள் "தேசத் துரோகிகள் சுடப்பட்ட வேண்டும் " என்ற பதிலளித்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்பு சகோதரர் திரு. @mkstalin அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட “என் மனமார்ந்த வாழ்த்துக்கள்”
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2020
திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
சமூக நீதியை, சனநாயகத்தைக் காக்கும் தொடர் போராட்டத்தில், அரசமைப்புச் சட்டத்தையும் தேசத்தையும் காக்கும் அறப்போராட்டத்தில் திமுகவுடன் விசிக உற்றதுணையாக நிற்போம்@mkstalin pic.twitter.com/TiRI22mkZR— Thol.Thirumavalavan (@thirumaofficial) March 1, 2020
அரசியல் என்பது திரைப்படம் அல்ல . இதை கமல்ஹாசன் புரிந்து கொண்டிருப்பார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரஜினி கட்சி தொடங்கிய பிறகு, கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு (ப்ளஸ் 2) பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் வாழ்வின் முக்கியமான தேர்வைப் பதற்றமில்லாமல், மிகுந்த கவனத்தோடும், நம்பிக்கையோடும் எழுதுங்கள். தங்களின் இலக்குகளை நீங்கள் நினைத்ததுப்போலவே அடைந்திட வாழ்த்தி மகிழ்கிறேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தப்படும். அதிமுக அரசு சிறுபான்மையின மக்களின் அரணாக விளங்கி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது, ராமநாதபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,650 மருத்துவ மாணவர் இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம் 97 ரன்கள் மட்டுமே இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 4 விக்கெட்களை எஞ்சியுள்ளன. 3 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இந்த போட்டியிலும் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகவே உள்ளது.
கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், வைரஸ் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். . 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முன்மாதிரியாக அமையும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரைக்கு வருவதில் பெருமை அடைவதாக கூறினார். ராமநாதபுரம், விருதுநகர் பகுதியில் நடைபெற உள்ள புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்த அவர், 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் தமிழகத்துக்கு பரிசளித்துள்ளார் என்றார். மதுரையில் சிறந்த மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என்ற அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, ஜப்பானின் ஜெய்கா நிறுவனம் நிதி வழங்கியுள்ளது என்றார்.
கோவை கோர்ட் வளாகம் முன், ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தி.மு.க.,வினர் தடை மீறி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். சென்னையில் மென்மொருள் நிறுவனத்தில் பணியாற்றிய சுபஸ்ரீ, கடந்தாண்டு செப்.,ல், மொபட்டில் சென்றபோது, அ.தி.மு.க.,வினரால் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் காற்றில் பறந்து விழுந்ததில் லாரியில் சிக்கி பலியானார்.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது. பேனர் வைப்பவர்கள் மீது வழக்கு பதியப்படுவதால், அரசியில் கட்சியினர் மற்றும் தனியார் பிளக்ஸ் பேனர் வைப்பதை தவிர்த்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights