Advertisment

நவ.10ல் அறிமுகமாகும் புதிய ரக பீர்கள்: மதுப் பிரியர்கள் உற்சாகம்!

தீபாவளிக்கு 2 நாள்களுக்கு முன்பு புதிய வகை பீர்களை அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய ரக பீர்கள் நவ.10ஆம் தேதி முதல் டாஸ்மாக்கில் விற்பனைக்கு வருகின்றன.

author-image
WebDesk
New Update
Chennai women arrested making beer at home

தமிழ்நாட்டில் தினமும் 50 லட்சம் பீர் விற்பனையாகி வருகிறது.

தமிழக டாஸ்மாக் கடைகளில் பீர் ரகங்களுக்கு கடும் கிராக்கியும், தட்டுப்பாடும் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து பீர் வாங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

அதன்படி மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஓ.எம். என்ற நிறுவனத்துக்கு பீர் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிறுவனம் கும்மிடிப்பூண்டியில் மது ஆலையை தொடங்க உள்ளது.

Advertisment

beer-820011__340 (1)

இந்த கம்பெனியின் பீர்கள் நவ.10ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வருகின்றன. அதன்படி நவ.10ஆம் தேதி முதல் டாஸ்மாக்கில் ஹண்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் கிடைக்கும்.

மேலும் டிசம்பர் மாதத்துக்கு பின்னர் மேலும் வெளிமாநில பீர்களும் விற்பனைக்கு வர உள்ளன. சமீபத்தில் எஸ்.என்.ஜே குழுமத்திடம் இருந்து பார்லி பீர் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் வெளிமாநில நிறுவனங்கள் பீர்களை குளிமையாக விற்பனை செய்ய பிரிட்ஜ் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பேச்சுவார்த்தையும் அதிகாரிகள் தரப்பில் நடப்பதாக கூறப்படுகிறது.

தமிழக டாஸ்மாக் கடைகளில் சூப்பர் ஸ்டிராங், கோல்டு பிரீமியம் லேகர் பீர், கிங்பிஷர், கிங்பிஷர் ஸ்டிராங், கிளாசிக் பீர், மேக்னம் ஸ்டிராங், எஸ்.என்.ஜே மற்றும் டீசலக்ஸ் என கிட்டத்தட்ட 35 வகை பீர்கள் விற்பனைக்கு உள்ளன.

beer 2 - unspalsh (1)

தமிழ்நாட்டில் தினமும் 50 லட்சம் பீர் விற்பனையாகி வருகிறது. கோடைக்காலத்தில் இது 65 லட்சம் பெட்டியாக அதிகரித்து காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment