Advertisment

தமிழகத்தில் உள்ள 2500 கோவில்களை மறுசீரமைக்க ஏற்பாடு

Tamil Nadu News: தமிழகத்தில் உள்ள 2,500 கோவில்களில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, மொத்தம், 365 கோடி ரூபாய் நிதியளித்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் உள்ள 2500 கோவில்களை மறுசீரமைக்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள 2,500 சிவாலயங்களை மறுசீரமைக்க ஏற்பாடு (Source: Twitter/File photo)

Tamil Nadu News: தமிழகத்தில் உள்ள 2500 கோவில்களில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, மொத்தம், 365 கோடி ரூபாய் நிதியளித்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

தோட்டம் அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், சுவர்களை சரி செய்தல் போன்ற பல பணிகள் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.

publive-image

"ஆகம சாஸ்திர முறைப்படி கோவில் பூஜைகளை செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம், மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சிக்கிறோம்" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறினார்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமியின் கரையோரக் கோவிலை 171 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக மாற்றவுள்ளனர்.

ஆண்டு முழுவதும் முருகப்பெருமானின் பக்தர்களை ஈர்க்கும் புகழ்பெற்ற கோயில், இந்த ஆண்டு மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள 2500 சிவாலயங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

"திட்டத்தின் அளவு மற்றும் முன்மொழியப்பட்ட பணிகள் திருச்செந்தூரில் உள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் வருவதால், மாநில அரசு மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதியை கோரியுள்ளது" என்று HR & CE கமிஷனர் ஜே.குமரகுருபரன் தெரிவித்தார்.

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் நிகழ்வைக் காண குறைந்தது 4 லட்சம் பக்தர்கள் கூடுகின்றனர். அதே நேரத்தில் சராசரி நாளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னதிக்கு வருகை தருகின்றனர்.

வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இறைவனை தரிசனம் செய்வதற்கான மக்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த பழமையான கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலுக்கு அருகாமையில் தங்குவதற்கும், சிரமமின்றி தரிசனம் பெறுவதற்கும் ஏற்பாடுகள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

“தி.மு.க அரசுதான் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. நாங்கள் அதிக எண்ணிக்கையிலான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்கிறோம், நிர்வாகத்தில் எங்களின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் பல நல்ல தீர்ப்புகளை பெற்று வருகிறோம்,” ஜே.குமரகுருபரன் என்றார்.
இதற்கிடையில், இங்குள்ள வடபழனி ஆண்டவர் கோவிலில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாநிலத்தில் உள்ள சுமார் 500 கோவில்களுக்கு கிரெடிட்/டெபிட் கார்டு மற்றும் யுபிஐ கட்டண வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment