Advertisment

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; கூட்டணி வைக்காமல், தனித்து களம் காணும் விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் இயக்கம், தேர்தலுக்கு முன்பாக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; கூட்டணி வைக்காமல், தனித்து களம் காணும் விஜய் மக்கள் இயக்கம்

Janardhan Koushik 

Advertisment

Tamil Nadu: Thalapathi Vijay Makkal Iyakkam to not form alliance in civic polls: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமாக இருந்த இந்த அமைப்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 129 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியை பதிவு செய்தது.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம், தேர்தலுக்கு முன்பாக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று கூறினார். எனவே, தேர்தல் பிரச்சாரத்தின் போது தளபதி விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்த, மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைப்பின் பிற நிர்வாகிகள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம், புஸ்ஸி ஆனந்த் indianexpress.com இடம், வரவிருக்கும் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்படும் என்று நம்புவதாக தெரிவித்திருந்தார்.

“வேட்பாளர்கள் இயக்கத்தின் புகைப்படங்கள் மற்றும் பேனர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். உறுப்பினர்களின் நலனில் நமது தளபதி மிகுந்த அக்கறை கொண்டவர். தேர்தலுக்காக எங்கள் வேட்பாளர்கள் யாரும் கடன் வாங்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்” என்று ஆனந்த் கூறினார்.

இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 12,607 பதவிகளுக்கு மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 74,383 வேட்புமனுக்கள் பெறப்பட்டன, அவற்றில் 2,062 நிராகரிக்கப்பட்டன, 14,324 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன, 218 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவகங்கையில் உள்ள ஒரு வார்டில் வேட்புமனு தாக்கல் இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Local Body Election Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment