திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? - மக்கள் ஆர்வம்
Tamil nadu Byelection : தங்கள் எம்எல்ஏ எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், பிரச்சனைகள் வெளியே தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த பாக்கியம் கூட, இந்த தொகுதி மக்களுக்கு கிட்டவில்லை
Tamil nadu Byelection : தங்கள் எம்எல்ஏ எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், பிரச்சனைகள் வெளியே தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த பாக்கியம் கூட, இந்த தொகுதி மக்களுக்கு கிட்டவில்லை
Tamil nadu, thiruvottiyur, gudiyattam, assembly, byelection, coronavirus, lockdown, tamilnadu goverment, covid pandemic, elelction commission, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், கொரோனா பாதிப்பின் காரணமாக, விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுடன் இணைந்து நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தில் திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கேபிபி சாமி மற்றும் குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ எஸ் காத்தவராயன், கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் மரணமடைந்தனர். இதனையடுத்து அந்த சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
Advertisment
Advertisements
தேர்தல் நடைமுறைகளின்படி, தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால், அங்கு தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இந்த ஆட்சி முடிவடைய இன்னும் 1 ஆண்டுக்கும் குறைவாகவே காலம் உள்ள நிலையில், சட்டசபை தேர்தல் உடனே, இந்த இடைத்தேர்தல்களும் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் காமராஜர், குடியாத்தம் தொகுதியின் எம்எல்ஏ ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2016 சட்டசபை தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயந்தி பத்மனாபன் வெற்றி பெற்றார். அவர்க கட்சி விதிகளை மீறியதாக சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, 2019 ஏப்ரலில் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட காத்தவராயன் வெற்றி பெற்றார்.
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறியதாவது, இந்திய ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதி இல்லாத தொகுதியாக இவ்விரு தொகுதிகளும் உள்ளன. இவ்விரு தொகுதி மக்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்கொணர முடியாத நிலையில் உள்ளனர். தங்கள் எம்எல்ஏ எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், பிரச்சனைகள் வெளியே தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த பாக்கியம் கூட, இந்த தொகுதி மக்களுக்கு கிட்டவில்லை
இந்நேரத்தில், சட்டசபை நேரத்தில், இந்த தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் பட்சத்தில், அரசியல் கட்சிகள் பல அறிவிப்புகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil