அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Tamil nadu government : ஒருவர் ஓய்வு பெற்றால் மட்டுமே இன்னொருவர் அந்த இடத்திற்கு வரமுடியும் என்பதால் இது ப்ரோமோசனை சிலருக்கு பாதிக்கலாம்.

tamil nadu, TN governement, Cm Palanichami., government servants, retiriement age, government order, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
TN governement

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது வரை 58 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59 வயதாக அதிகரித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

யார் யாருக்கு பொருந்தும் : இந்த உத்தரவு அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை உடனடியாக அமலுக்கு வரும் தமிழகஅரசு அறிவித்துள்ளது. எனவே இந்த மாதத்தில் ஓய்வு பெறுவோருக்கும் இந்த அரசாணை பொருந்தும் என தெரிகிறது.

இதன் காரணமாக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். அத்துடன் புரோமோசன் உள்ளிட்டவை சிலருக்கு தாமதம் ஏற்படலாம். ஏனெனில் ஒருவர் ஓய்வு பெற்றால் மட்டுமே இன்னொருவர் அந்த இடத்திற்கு வரமுடியும் என்பதால் இது ப்ரோமோசனை சிலருக்கு பாதிக்கலாம். எனினும் 58 வயதில் இருந்து 59 வயதாக ஒய்வு பெறும் வயதை அதிகரித்து இருப்பது தமிழக அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக அகவிலைப்படி உயர்வு ரத்து, ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து உள்ளிட்டவற்றால் வேதனையில் இருந்த அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பை மகிழ்ச்சியை அளித்திருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu tn governement cm palanichami government servants retiriement age

Next Story
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்க சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள் தயார்corona virus, lockdown, chennai, stranded indians, flights, star hotels, extenal ministry, , corona tests, quarantine, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com