scorecardresearch

அரிசி, கொண்டைகடலை, முட்டை…பள்ளி மாணவர்களின் வீடு தேடி செல்லும் உலர் உணவு பொருட்கள்

குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த, சத்துணவு பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரிசி, கொண்டைகடலை, முட்டை…பள்ளி மாணவர்களின் வீடு தேடி செல்லும் உலர் உணவு பொருட்கள்

கொரோனா தொற்று காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த, சத்துணவு பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, , சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும், உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் உட்பட அனைத்து குழந்தைகளுக்கும், பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் பணி ஜனவரி 20 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

உத்தரவின்படி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு 1.100 கிலோ அரிசி, 594 கிராம் பருப்பு, 40 கிராம் கொண்டை கடலை அல்லது பாசி பருப்பு, 11 முட்டைகள் வழங்கப்படுகிறது.

6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு 1.650 கிலோ அரிசி, 890 கிராம் பருப்பு, 40 கிராம் கொண்டை கடலை அல்லது பாசி பருப்பு, 11 முட்டைகளும் வழங்கப்படுகின்றன.

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு,அவர்களின் வீடுகளுக்கு, அங்கன்வாடி பணியாளர்கள் நேரடியாக சென்று உலர் பொருட்களை வழங்குகின்றனர்.

மற்றப்படி மாணவர்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வாரத்தில் ஒரு நாளில் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு வந்து மேற்கண்ட பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டம் மூலம் 42.13 லட்சம் பள்ளி மாணவர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu to provide dry ration products for students once in 15 days