scorecardresearch

அடுத்த 48 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு.. சென்னை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu to receive rain till March 28
தமிழகத்தின் சில பகுதிகளில் மார்ச் 28ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என பிராந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 25-28ஆம் தேதிவரை 30-40 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசக் கூடும்.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தப்பட்சம் 26 டிகிரி செல்சியஸ் முதல் அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெயில் தாக்கக் கூடும்.

தொடர்ந்து, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மார்ச் 25-ஆம் தேதி சனிக்கிழமை கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu to receive rain till march 28