Advertisment

Tamil Nadu today news updates : குறைந்தது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து

Chennai petrol diesel price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.78க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.13 பைசாவிற்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu today news live updates : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவான 93.4 டிஎம்சியில், 66.43 டிஎம்சி நீர் தற்போது அணையில் உள்ளது. அதாவது, 101.22 கன அடி நீர் தற்போது அணையில் உள்ளது. இந்நிலையில், காவிரி விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணியில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி மலர்த்தூவி இன்று தண்ணீர் திறந்து வைத்தார். வினாடிக்கு, 3000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 10,000 கன அடி வரை நீர்த் திறக்கப்படும்.

Advertisment

ஒகேனக்கலில் பெருவெள்ளம்

ஒகேனக்கலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஒகேனக்கலில் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் இருந்த தடுப்புகம்பிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கேரளா மாநிலம் மீண்டும் கனமழையால் தத்தளித்து வரும் நிலையில், கேரள மாநில மக்களுக்கு உதவ முன்வருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மக்களுக்கு தேவையான அரிசி, துணிமணி உள்ளிட்ட நிவாரண பொருட்களை திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines, Cinema, Sports  : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் இங்கே அறிந்து கொள்ளலாம்



























Highlights

    21:58 (IST)13 Aug 2019

    தேர்வு கட்டண உயர்வை திரும்பப்பெற்றது சிபிஎஸ்இ

    பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கு தேர்வு கட்டண உயர்வை திரும்பப்பெற்றது சிபிஎஸ்இ. தேர்வு கட்டண உயர்வு தொகை டில்லி அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்று  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

    20:58 (IST)13 Aug 2019

    குறைந்தது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து

    மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சம் கனஅடியில் இருந்து 1.5 லட்சம் கனஅடியாக குறைந்தது. 

    மேட்டூர் அணை நீர்மட்டம் - 106.70 அடி, நீர் இருப்பு - 73.79 டிஎம்சி, நீர்வரத்து - 1,50,000 கனஅடி, நீர் திறப்பு - 10,000 கனஅடியாக உள்ளது.

    20:16 (IST)13 Aug 2019

    தேசிய விருதுகள் விவகாரம் : பா.ஜ.வை கேள்வி கேட்க முடியாது – தமிழிசை

    தேசிய  விருதுகள் நடுவர்கள் மூலம் வழங்கப்படுவதாகவும், நடுவர்கள் குழுவில் பா.ஜ.க.வினர் யாரும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில், யாரும் பாரதிய ஜனதா கட்சியை கேள்வி கேட்க முடியாது என்று தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    19:31 (IST)13 Aug 2019

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் கலைமாமணி விருதுகள் – முதல்வர் பழனிசாமி

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் கலைமாமணி விருது வழங்கப்படும். மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    19:04 (IST)13 Aug 2019

    அத்திவரதர் தரிசனத்திற்கு காலநீட்டிப்பு கிடையாது - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

    அத்திவரதர் தரிசனத்திற்கு கால நீட்டிப்பு கிடையாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, 48 நாட்கள் மட்டுமே அத்தி வரதர் தரிசனம் நடைபெறும் என்றார். ஆகம விதிப்படி மட்டுமே அத்திரவதர் தரிசனம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

    18:33 (IST)13 Aug 2019

    முதலமைச்சர் கலைமாமணி விருது!

    கலைமாமணி விருதில் பரிசு பொருளில் முதல்வர் பழனிசாமி புதிய மாற்றத்தை அறிவித்துள்ளார். இனிமேல் 3 சவரனுக்கு பதிலாக, 5 சவரன் ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

    17:58 (IST)13 Aug 2019

    சென்னையில் மழை!

    சென்னையில் எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.  தனியார் வானிலை நிபுணரான செல்வக்குமார் இன்று இரவு முழுவதும் சென்னையில் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். 

    17:34 (IST)13 Aug 2019

    நளினி வழக்கில் தமிழக அரசு பதில்!

    ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி விடுதலை குறித்து தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கேட்க முடியாது என கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது, உயர்நீதிமன்றம் .  ராஜீவ் காந்தி வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும். 

    16:34 (IST)13 Aug 2019

    தமிழக அரசு எச்சரிக்கை!

    கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 2.25 லட்சம் கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம்.  உரிய நடவடிக்கைகளை எடுக்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்  எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    16:00 (IST)13 Aug 2019

    நீட் தேர்வு விலக்கு மசோதா!

    நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு அளித்த விளக்கத்தின் அடிப்படையில் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறக்கோரிய வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.  மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு அளித்த விளக்கத்தின் அடிப்படையில் வழக்கு முடித்து வைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என தமிழக அரசு சார்பில்  நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் தனி வழக்காக தான் தாக்கல் செய்ய முடியும் என கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். 

    15:41 (IST)13 Aug 2019

    அஜித்துக்கு ரஜினி சொன்ன வாழ்த்து!

    அஜித் நடிப்பில் வெளிவந்து வெற்றிக் கரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார். படத்தை பார்த்து விட்டு நடிகர் அஜித்துக்கு ஃபோனில் தொடர்புக் கொண்டு வாழ்த்து கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    15:23 (IST)13 Aug 2019

    ஏறுமுகத்தில் தங்க விலை!

    புதிய உச்சத்தை தொட்டதுள்ளது தங்கம் விலை.  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.29,016க்கு விற்பனை  செய்யப்படுகிறது.  22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.3,627க்கு விற்பனை; வெள்ளி கிராமுக்கு ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    14:03 (IST)13 Aug 2019

    நமக்கு தேசிய விருது கிடைக்காது - யுகபாரதி

    'சிறந்த படமாக இருந்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கப்போவதில்லை' என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

    14:02 (IST)13 Aug 2019

    திமுக சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    14:01 (IST)13 Aug 2019

    நாளை வெளியாகும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்

    11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    13:59 (IST)13 Aug 2019

    காஞ்சிபுரம் ஆட்சியர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

    அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை திட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

    13:28 (IST)13 Aug 2019

    தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கணும் - அன்புமணி ராமதாஸ்

    தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை பாதிப்பில் நிவாரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    13:24 (IST)13 Aug 2019

    மீண்டும் எம்.பி.யாகும் மன்மோகன் சிங்

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.

    இதையடுத்து, மீண்டும் அவரை, எம்.பி.,யாக தேர்வு செய்ய, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, அவரை எம்.பியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று, ஜெய்ப்பூர் வந்த மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    12:40 (IST)13 Aug 2019

    5 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது

    தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பான காவல் பணிக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு வழங்கப்படுகிறது. துணை ஆணையர் லட்சுமணன், கூடுதல் எஸ்.பி மாரிராஜன், ஆய்வாளர்கள் தீபா, சாந்தி, சந்திரசேகரன் தேர்வு.

    12:12 (IST)13 Aug 2019

    முதல்வர் பழனிசாமிக்கு உறுத்தும் - கார்த்தி சிதம்பரம்

    'ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?. பல வருடங்களாக மத்திய அமைச்சராக பதவி வகித்து அவர் எந்த திட்டத்தைக் கொண்டு வந்தார்? என்ன பிரச்சனையை தீர்வு செய்தார்? காவிரி பிரச்சனையை தீர்த்தாரா? அவரது நலன் தான் அவருக்கு முக்கியம். அவரால் பூமிக்குத்தான் பாரம்' என முதல்வர் பழனிசாமி விமர்சித்தார்.

    இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரன், 'ஒன்பது முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த என் தந்தையை பற்றி பேசக் கூடிய வார்த்தைகளா இது?.. நிச்சயம் முதல்வர் பழனிசாமியின் மனசாட்சியை இது உறுத்தும்' என்று பதிலளித்துள்ளார்.

    12:02 (IST)13 Aug 2019

    வெள்ள பாதிப்பு... மக்களுக்கு உதவ அரசு இனியாவது முயற்சிக்கணும் - கனிமொழி எம்.பி.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசு இனியாவது முயற்சி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை -.கனிமொழி எம்.பி

    11:39 (IST)13 Aug 2019

    எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் - முதல்வர் இன்று வழங்குகிறார்

    எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள விழாவுக்கு, சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். விருது பெறும் கலைஞர்களுக்கு, தங்க பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை முதலமைச்சர் வழங்க உள்ளார். கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    11:20 (IST)13 Aug 2019

    கிளிப்பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர்

    40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம், காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த ஒன்றாம் தேதி முதல் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிற பட்டு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சி தரும் நிலையில், 44வது நாளான இன்று, கிளிப்பச்சை நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார். அத்திவரதர் உற்சவம் நிறைவடையை இன்னும் 4 நாட்களே உள்ளது. அதிலும், பக்தர்களுக்கான தரிசனம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ளது. இந்நிலையில் அலைமோதி வரும் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    11:18 (IST)13 Aug 2019

    அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்க முறையீடு

    அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு.

    மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தகவல்.

    மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டும என்பதால் அத்திவரதர் வைபவத்தை மேலும் நீட்டிக்க கோரி மனு

    வைபவம் முடிய குறைவான நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர் - மனுதாரர்.

    11:10 (IST)13 Aug 2019

    நீரின் அளவு 2.10 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2.10 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இது வரலாற்றில் 65வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    10:58 (IST)13 Aug 2019

    தற்காலிக தடுப்பிற்கு பாதிப்பின்றி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் - பொதுப்பணித்துறை

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி எட்டு மதகுகள் உடைந்தன. அதனை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் புதிய மேலணை 387 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கான பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அடிக்கல் நாட்டி துவக்கி வைத்திருந்தார். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 38 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 3 நாட்களில் நிறைவு பெறும் என்றும், காவிரியில் ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டாலும் தற்காலிக தடுப்பிற்கு பாதிப்பின்றி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

    10:27 (IST)13 Aug 2019

    விண்ணை முட்டும் தங்கம் விலை

    இன்று வெள்ளி கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.48.50 க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.3,612க்கு விற்கப்படுகிறது. மேலும் 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்து 28,896 க்கு விற்கப்படுகிறது.13 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,416 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    10:19 (IST)13 Aug 2019

    ப.சிதம்பரத்தால் பூமிக்கு பாரம் - முதல்வர் பழனிசாமி

    ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?; அவரால் பூமிக்குத்தான் பாரம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    09:52 (IST)13 Aug 2019

    டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும் - முதல்வர்

    தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, "இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். காவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும். பொதுப்பணித்துறை சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குளம், குட்டைகள் தூர்வாரப்படும். கோதாவரி - காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி. மத்திய அரசின் உதவியுடன் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும்" என்று தெரிவித்தார்.

    09:46 (IST)13 Aug 2019

    Mettur Dam Opened: மேட்டூர் அணையில் இருந்து நீர்த் திறப்பு

    மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரியாற்றில் தண்ணீர் திறந்தார் முதல்வர் பழனிசாமி. மேட்டூர் அணையை திறந்து வைத்து காவிரியாற்றில் மலர்தூவினார் முதல்வர் பழனிசாமி. இதன்பின் பேசிய முதல்வர் பழனிசாமி, "சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்" என்றார்.

    Latest News in Tamil Nadu Live Updates: கர்நாடகத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, உப்பள்ளி-தார்வார், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தற்போது பெலகாவி உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஷ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன் துறை முகம் அழைத்துச்சென்ற இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் படிக்க - மேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment