Advertisment

Tamil Nadu Today News : தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது – ரஜினிகாந்த்

Chennai petrol diesel price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.78க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.13 பைசாவிற்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu today news live updates : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கன மழை குறைந்திருக்கிறது. சில இடங்களில் முற்றிலும் மழை நின்றுவிட்டது. அதேசமயம், கேரளாவில் பெய்த பேய் மழை நின்று, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், சில இடங்களில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது

Advertisment

சந்திரயான், சுதந்திர தினம்

73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பாடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதுபோல், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines, Cinema, Sports  : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் இங்கே அறிந்து கொள்ளலாம்



























Highlights

    22:14 (IST)14 Aug 2019

    நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு - முதல்வர் பழனிசாமி உத்தரவு

    மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    22:04 (IST)14 Aug 2019

    சாலைவிதிகளை மீறுவோர்க்கு அபராத தொகை அதிகரிப்பு : போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு

    போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.100- லிருந்து, ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,  ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம், ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்யப்படும். ஓட்டுநர் உரிமத்தை தகுதியிழப்பு செய்த பின்னர் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்  விதிக்கப்படும்.  பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். சாலைகளில் அதிவேகமாக, பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    22:01 (IST)14 Aug 2019

    வெற்றிடத்தை, ஸ்டாலின் மட்டுமே நிரப்புவார் - திருமாவளவன்

    காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா விட்டு சென்ற வெற்றிடத்தை, ஸ்டாலின் மட்டுமே நிரப்புவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

    20:54 (IST)14 Aug 2019

    108.92 அடியை எட்டியது மேட்டூர் அணை

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.92 என்ற அளவை எட்டியுள்ளது. நீர் இருப்பு - 76.88 டிஎம்சியாக உள்ளது., நீர்வரத்து - 48,000 கனஅடியாக உள்ளது. 10,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

     

    19:51 (IST)14 Aug 2019

    சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு எனது வீர வணக்கம்

    சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு எனது வீர வணக்கம்  என்று 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    19:00 (IST)14 Aug 2019

    தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது – ரஜினிகாந்த்

    காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு பிரச்னை; காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி, அமித்ஷா ராஜதந்திரத்தோடு கையாண்டு இருக்கிறார்கள். எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் . நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் காஷ்மீர் விவகாரம் தொடர்பான நடவடிக்கையை பாராட்டினேன். தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

    18:30 (IST)14 Aug 2019

    தமிழகத்தை சேர்ந்த 23 போலிசாருக்கு குடியரசுத்தலைவர் விருது

    நாட்டின்ங 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தை சேர்ந்த 23 போலீசாருக்கு குடியரசுத்தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், சிறந்த பொதுச்சேவைக்காக, 16 போலீசாருக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    17:54 (IST)14 Aug 2019

    கனிமொழி ட்வீட்!

    பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை அணிய கூடாது என்ற பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். 

    17:32 (IST)14 Aug 2019

    மு.க ஸ்டாலின் பதிவு!

    நெல்லை வீர தம்பதிக்கு அரசியல் தலைவர்கள் தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்

    16:50 (IST)14 Aug 2019

    அத்தி வரதர் விஐபி தரிசனம்!

    நாளை 12 மணியுடன் விஐபி தரிசனம் நிறைவு பெறுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் விஐபி தரிசனம் கிடையாது என மாவட்ட ஆட்சியர்   தெரிவித்துள்ளார். 17-ம் தேதி அன்று ஆறு கால பூஜைகள் நடத்தப்படும். ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்

    16:17 (IST)14 Aug 2019

    தயாநிதி மாறனின் 90 நாள் பணி புத்தகம்!

    தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், 90 நாட்களில் செய்த மக்கள் பணிகளை விளக்கும் 'மக்கள் பணியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதனை தயாநிதி மாறன் பெற்றுக் கொண்டார். 

    16:15 (IST)14 Aug 2019

    அபிநந்தனுக்கு விருது அறிவிப்பு!

    அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது. இதே போல், தீயணைப்புத்துறையில் வீரதீர சேவை புரிந்த 56 வீரர்களுக்கும், குடியரசு தலைவர் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இவர்களில், தமிழகத்தை சேர்ந்த அதிகாரி உமாபதி தண்டபாணிக்கு துணிச்சலுக்கான விருது வழங்கப்படுகிறது.

    15:36 (IST)14 Aug 2019

    மக்கள் நீதி மய்யம் பொதுசெயலாளர்கள்!

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொதுச்செயலாளர்களை நியமித்துள்ளார் கமல்ஹாசன். பொதுச்செயலாளர்களாக அருணாச்சலம், ஏ.ஜி.மௌர்யா, ரங்கராஜன், உமாதேவி, பஷீர் அகமது  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அருணாச்சலம் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் மேலும் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

    14:56 (IST)14 Aug 2019

    முடிவுக்கு வரும் அத்திவரதர் தரிசனம்

    அத்திவரதர் தரிசனத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், அரசும், அறநிலையத்துறையும் தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    14:48 (IST)14 Aug 2019

    எந்தெந்த மாவட்டத்திற்கு எவ்வளவு பேருந்துகள் தெரியுமா?

    தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் 154 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது. சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த புதிய பேருந்து சேவையில், சென்னை மாநகர போக்குவரத்திற்கு 235 பேருந்துகள் வழங்கப்பட்டன. அதே போல், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 118 பேருந்துகள், திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு 14 பேருந்துகள், சேலம் போக்குவரத்து கழகத்திற்கு 60 பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட நவீன வசதியுடன் கூடிய சுற்றுலா பேருந்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

    13:45 (IST)14 Aug 2019

    ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை இல்லை - லஞ்ச ஒழிப்புத்துறை

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:23 (IST)14 Aug 2019

    நாட்டின் மொத்த விலை பணவீக்கம் குறைவு

    நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஜூலையில் 1.08ஆக குறைந்துள்ளது. கடந்தாண்டு ஜூலையில் மொத்த விலை பணவீக்கம் 5.27%ஆக இருந்த நிலையில் இந்தாண்டு குறைந்தது.

    13:04 (IST)14 Aug 2019

    கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    நெல்லை, கோவை, நீலகிரி மாட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

    12:55 (IST)14 Aug 2019

    'தமிழக முதல்வர் விமர்சிக்காமல் இருப்பது நல்லது' - புதுச்சேரி முதல்வர்

    'ப.சிதம்பரம் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியும், தமிழக முதலமைச்சர் மற்ற தலைவர்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது' என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

    12:53 (IST)14 Aug 2019

    தேசிய விருதுகள் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம் - வசந்தபாலன்

    தமிழகம் கலைகளின் தாயகம், தேசிய விருதுகள் கிடைக்காமல் போனது பெரிய துரதிருஷ்டம் என இயக்குனர் இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

    12:20 (IST)14 Aug 2019

    குற்றாலம் மெயின் அருவி ரெடி!

    குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    12:18 (IST)14 Aug 2019

    செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைப்பது திமுக - மு.க.ஸ்டாலின்

    திமுக சார்பில் 2வது நாளாக கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின். நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களை அண்ணா அறிவாலயத்தில் கொடியசைத்து அனுப்பினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது திமுக" என்றார். 

    11:44 (IST)14 Aug 2019

    கனமழை எதிரொலி - முதல்வர் ஆலோசனை

    நீலகிரி, கோவில் கனமழை பெய்து வரும் நிலையில், பாதுகாப்பு பணிகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

    11:32 (IST)14 Aug 2019

    ரஜினிக்கு ஓவைசி கேள்வி

    மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணர்-அர்ஜூனர் என்றால் கவுரவர்கள் யார்? என நடிகர் ரஜினிக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். 

    11:01 (IST)14 Aug 2019

    கொள்ளையர்களை விரட்டிய கோவை தம்பதிக்கு விருது

    கொள்ளையர்களை விரட்டிய நெல்லை வீர தம்பதிகளுக்கு தமிழக அரசு விருது வழங்குகிறது. நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு முதலமைச்சர் விருது வழங்குகிறார்.

    10:58 (IST)14 Aug 2019

    தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ. 3,576க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.28,608க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது.

    10:50 (IST)14 Aug 2019

    முதல்வர் பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

    'சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த உறுதியேற்போம்' என நாளை கொண்டாடப்படவுள்ள 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    10:48 (IST)14 Aug 2019

    நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

    கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில்சேவை மீண்டும் தொடங்கியது.

    மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றது.

    கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

    10:45 (IST)14 Aug 2019

    தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் அளவு குறைப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 72,000 கன அடியிலிருந்து 62,225 ஆக குறைப்பு.

    கபினி அணையிலிருந்து 32,708 கனஅடி, கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 29,517 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    10:43 (IST)14 Aug 2019

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    10:41 (IST)14 Aug 2019

    500 புதிய அரசு பேருந்துகளின் சேவை - முதல்வர் தொடக்கம்

    சென்னையில் 500 புதிய அரசு பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 235, அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 118 பேருந்துகள் என சுமார் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

    10:33 (IST)14 Aug 2019

    அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்

    காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டு இருக்கிறார் வருகிற 17 ஆம் தேதியுடன் தரிசனம் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் காஞ்சிபுரம் வந்தார், மனைவி லதாவுடன் நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் அத்திவரதரை தரிசித்தார், அவரை வரவேற்ற அர்ச்சகர்கள், அத்திவரதரின் சிறப்புகளை விளக்கி கூறி சிறப்பு பூஜைகளை செய்தனர். தரிசனம் முடிந்த பின்னர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

    Latest News in Tamil Nadu Live Updates: கேரளாவில் உள்ள மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், கசர்கோட் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் 73-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பதற்ற சூழல் நிலவுவதால் இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குள் என மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment