Tamil Nadu News Today Live Updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் பிரத்யேக எக்ஸ்க்ளூசிவ் லைவ் பிளாக்கில் காணலாம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயும் அமலாக்கத் துறையும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இவ்வழக்கில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், சிதம்பரத்தின் சிபிஐ காவலும் இன்றுடன் நிறைவடைகிறது.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, 2 நாள் பயணமாக மோடி நேற்று ரஷ்யா சென்றார். சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்காவை சந்தித்தார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines - தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.
தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் தொடர்கிறது. ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் உடன் உள்ளனர். இதுமட்டுமின்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், அமைச்சர் நிலோபர் கபில் ரஷ்யாவுக்கும், கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும் சென்றுள்ளனர். பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்லாந்துக்கு சென்று விட்டு சென்னை திரும்பி விட்டார்.
தொடர்ந்து இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிங்கப்பூர் சென்றனர். சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்ப்பதற்காக சி.வி. சண்முகம் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இதேபோல் தனிப்பட்ட பயணமாக தன் குடும்பத்தினருடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துபாய் வழியாக எகிப்து சென்றுள்ளார். எனவே, வெளிநாடு சென்ற தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 10 ஆனது.
ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்புங்கள் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம். சிங்கப்பூர், சுவிஸ் நாடுகளில் தான் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளது என்றும் வாதம். நீதிமன்ற காவலுக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் திகார் சிறைக்கு அனுப்பப்படுவார் நிதி அமைச்சர்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் , ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் பிரித்து கடந்த மாதம் 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் சாலை வரைபடங்கள் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு பல்வேறு கல்வித் திட்டங்களை செயல்படுத்தினாலும், மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பவர்கள் ஆசிரியர்கள் தான் என்று தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சனையை கூர்ந்து கவனித்து வருவதாக கூறிய அவர், முதலமைச்சரின் அனுமதிக்குப் பின்னர் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முத்தூட் நிறுவன அதிபர் மகன் பால் முத்தூட் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றம் 9 பேருக்கு ஆயுள் தண்டனையை வழங்கியது. ஆனால் கேரள உயர் நீதிமன்றம், அந்த கொலை வழக்கில் 8 பேருக்கு நேரடி தொடர்பு இல்லை என்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்கின்றோம் என அறிவித்துள்ளது.
2006ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் பெறுவது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் என இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி ஓ.பி.ஷைனி. வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் வெளிநாடு பயணிக்க கூடாது என்றும் அவர்கள் இருவருக்கும் நிபந்தனை விதிக்கபப்ட்டுள்ளது.
தமிழகத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தின் புதிய விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த அரசு, "செப்.1ம தேதி விதிகள் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே, சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
"பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்து கொண்டுள்ளோம். பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்தனர்" என திருப்பூர் நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முன்னதாக, 'கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது' என இதே விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்தது? முதலீட்டாளர்கள் தமிழகம் வந்தால் திமுகவுக்கு மகிழ்ச்சிதான். ஒப்பந்தம் போடப்பட்ட முதலீட்டை அப்படியே கொண்டு வந்தால், முதல்வர் பழனிசாமிக்கு திமுக சார்பில் பாராட்டு விழா எடுக்க தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ தாரிகாமியை டெல்லி அழைத்து வந்து சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீதாராம் யெச்சூரி அளித்த அறிக்கை தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில், திமுக எம்.பி கனிமொழி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறைபாடான வேட்புமனுவை கனிமொழி தாக்கல் செய்ததாக மனுவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2,000 பணம் வழங்கப்பட்டதாகவும் மனுவில் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு: ஐ.என்.எக்ஸ். முறைகேடு புகார் வழக்கு சரியான திசையில் செல்கிறது. ஆகையால், உச்சநீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை. பொருளாதார வழக்குகள் சமூகத்தில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும். முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை கிடையாது. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடையாது. அவர் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தை சிதம்பரம் நாடலாம் என்று அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மலர் தூவி மரியாதை#VOChidambaram | #Jayakumar pic.twitter.com/UjObdwOcvI
— Thanthi TV (@ThanthiTV) September 5, 2019
சான் ஹுசே நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் ரூ2,300 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 6,500க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது. திருப்பூரில் வெள்ளகோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி மற்றும் தனியார் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் மீது நடிகை மதுமிதா போலீசில் புகார் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, விதிமுறையை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் மதுமிதா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நிகழ்ச்சியில் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, போட்டியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி நிறுவனமும், நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமும் தன்னைப்பற்றி தவறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் செய்யக்கூடாது என குறிப்பிட்டிருந்த அவர், நிறுவனங்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
அமெரிக்க பயணத்தில் தமிழகத்துக்கு மேலும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்தார் முதல்வர் பழனிசாமி. சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 16 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம்.
#InvestorsMeet #BayArea #SiliconValley #California #US_INDIA pic.twitter.com/H4bDofuJT9
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 5, 2019
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்து , ஒரு லிட்டர் ரூ.74.75 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.89 ஆகவும் உள்ளது.
இன்று ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், “மாணவர்களை நல்வழிப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை கட்டமைக்க ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துவதுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி தலைமை நீதிபதியாக அவரை நியமித்து மத்திய அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
மாநிலத்தில் உள்ள பொது வினியோகத் திட்டத்திற்கு ஆபத்தை உருவாக்கும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights