Tamil Nadu today news updates political events : இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் இந்த இணைப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பணிகள் குறித்த கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல் என்ற தலைப்பில் ஆவணப் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
இன்றைய வானிலை
இன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தான் சூரிய வெளிச்சத்தினை கோவை மக்கள் உணருகின்றனர். நீலகிரிம் வால்பாறை, வயநாடு என்று பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது யாரும் அந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அது தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற
Live Blog
Tamil Nadu news today updates political events, Chennai weather, Coimbatore Flood : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
கொழும்பு நகரில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்னாள் அதிபர் ராஜபக்சே கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலரும் தமது சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக மகிந்த ராஜபக்சே அறிவித்தார். இந்த அறிவிப்பு இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளான பக்ரீத் வாழ்த்துகளை, திமுக சார்பில் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தியாகம், அறம், மனிதநேயம், ஏழை எளியவர்கள் மீது பரிவு-கருணை உள்ளிட்ட உயர்ந்த நற்செயல்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 71 அடியாக உயர்ந்து உள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த 4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உயர்வு
எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு ரூ.50இல் இருந்து ரூ.1,200ஆக உயர்வு; பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.750இல் இருந்து ரூ.1,500 ஆக தேர்வுக் கட்டணம் உயர்வு
- சிபிஎஸ்இ
சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த சொரக்குடி பகுதியில் குடிமராத்து திட்டத்தின் கீழ் குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தூர்வாரும் பணிக்காக குளம் ஒன்றுக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட உள்ளதாக கூறினார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு
நீவரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.15 அடியாக உயர்ந்துள்ளது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.05 -லிருந்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு; அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் இந்திராநகர் பகுதியில் மண் சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். அதேபோல், நீலகிரி கூடலூரில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
திருப்பூர் அமராவதி அணையில் இருந்து, பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன நிலம் பயன்பெறும் வகையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தென்மேற்கு பருவ மழையால் அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால், அணையின் நீர் மட்டம் வெகுவாக உயரந்து வருகிறது. இன்னிலையில் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. 570 மில்லியன் கன அடி வீதம் 15 நாட்களுக்கு திறக்கப்படும் இந்த தண்ணீரால், 25000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இதனால் விவசாய மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகவில் உள்ள கிருஷ்ணசாகர் அணை தன்னுடைய முழுக் கொள்ளளவான 124 அடியில் 120 அடியை எட்டியுள்ளடது. இந்நிலையில் அந்த அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. கபினி அணையில் இருந்து நொடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணை தன்னுடைய முழுக் கொள்ளளவை எட்டிவிடும்.
காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால், கபினி போன்ற அணைகளில் இருந்து காவேரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவுக்குள் 1.50 லட்சம் கன அடி என்ற அளவை எட்டும் என மத்திய ஜல் சக்தி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேரளாவின் வயநாடு தொகுதியில் பலத்த மழை பெய்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த தொகுதியின் எம்.பி.யான ராகுல் காந்தி, இன்னும் சில தினங்களுக்கு வயநாட்டில் இருந்து, மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
For the next few days I will be based in my Lok Sabha constituency, #Wayanad that has been ravaged by floods. I will be visiting relief camps across Wayanad and reviewing relief measures with District & State officials.
— Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2019
நாளை இஸ்லாமிய சகோதர சகோதரிகள் பக்ரீத் என்ற ஈகை திருநாளை கொண்டாட உள்ளனர். அவர்களுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், எம்.பிக்கள். திருமாவளவன், வைகோ, மற்றும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தினகரன் உள்ளிட்டோர் தங்களின் வாழ்த்துகளை மக்களுக்கு கூறியுள்ளனர்.
ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் கோவை, நீலகிரி, மற்றும் தேனி மாவட்டங்களில் மேலும் கூடுதலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாகவும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
தன்னுடைய புத்தக விழாவிற்கு சென்னை வந்துள்ள துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு பேசி வருகிறார். அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக கூறிய அவர், அரசியலில் இருந்து நான் ஓய்வு பெற்றுவிட்டாலும், பொதுவாழ்வில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கூறினார். மேலும் பொதுவாழ்வில் இருக்கும் நபர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் அவரின் செயல்பாடுகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதல்வர் கேரள வெள்ளத்தில் சிக்கி 60 பேர் பலியாகியுள்ளனர் என்று அறிவித்துள்ளார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமித் ஷா தற்போது புத்தக வெளியீட்டு விழாவில் பேசி வருகிறார். வெங்கைய நாயுடுவிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். சிறப்புச் சட்டம் 370-ஐ நீக்க, போராடியவர்களில் மிக முக்கியமானவர் வெங்கையா நாயுடு என்றும் அமித் ஷா பேசி வருகிறார். அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ இங்கு நான் வரவில்லை. நான் வெங்கைய நாயுடுவின் மாணவனாக இங்கு வந்துள்ளேன். இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன். ஆனால் என்னால் இயலவில்லை. ஆனால் சென்னையில் அவர் ஒரு நாளாவது தமிழில் நிச்சயமாக பேசுவேன் என்றும் கூறியுள்ளார் அமித் ஷா.
வெங்கய்ய நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி “உழைப்பே உயர்வு என்பதற்கு வெங்கய்ய நாயுடுவின் வாழ்வே உதாரணம்” என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு தேவையான மத்திய அரசின் உதவிகளை பெற்று தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறார் வெங்கைய நாயுடு என்றும் முதல்வர் பேசியுள்ளார்.
வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி காந்த் தற்போது பேசி வருகிறார். மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட வெங்கைய நாயுடு 45 ஆண்டுகளுக்கு பிறகும் என்னை நினைவில் வைத்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் வெங்கையா நாயுடு ஒரு ஆன்மிகவாதி. அவர் அரசியல் தலைவராக வந்தது ஆச்சரியம் என்று கூறியுள்ளார்.
நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்பினை சந்தித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது நீலகிரி சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட உள்ளார். 10:45 மனிக்கு கோவை செல்லும் முக ஸ்டாலின், கார் மூலமாக உதகை செல்கிறார். அங்கு அவர் கூடலூர், பந்தலூர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க உள்ளார். நாளை குருத்துக்குறி பகுதியை மேற்பார்வையிடுகிறார் முக ஸ்டாலின்.
எதிர்வரும் ஜார்கண்ட், மகாராஷ்ட்ரா, மற்றும் ஹரியானா மாநில தேர்தல்கள் தற்போது காங்கிரஸ் சந்திக்க இருக்கும் மிகப்பெரிய சவால் ஆகும். உரிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் சோனியா பொறுப்பேற்றுள்ளார் என்று அக்கட்சியினர் பலரும் வரவேற்றுப் பேசியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights