Tamil Nadu today news updates : ஸ்டாலின் விளம்பரம் தேடிக்கொள்ள உதகை சென்றுள்ளார் – முதல்வர் பழனிசாமி

Chennai petrol diesel price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.78க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.13 பைசாவிற்கு விற்பனையாகிறது.

By: Aug 12, 2019, 10:22:54 PM

Tamil Nadu today news live updates : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை கொட்டி வருவதால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கர்நாடக, தமிழக எல்லையில் அமைந்திருக்கும் ஒக்கேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தொடர்ந்து 5வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று எங்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர் வரத்து நொடிக்கு 1.65 லட்சம் கனஅடியாக உயர்வு. தற்போது அணையின் நீர்மட்டம் 82.62 அடியாக உள்ளது. நீர் இருப்பு 44.61 டிஎம்சி. நீர் திறப்பு நொடிக்கு 1000 கன அடி.

Vikram Sarabhai 100th birth anniversary

இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் அவர்களின் 100வது பிறந்தநாள் இன்று. அதனை கொண்டாடும் விதமாக கூகுளின் டூடுல் கூகுள் ஹோம் பேஜ்ஜில் சிறப்பு சித்திரம் ஒன்றை வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது. இந்தியாவில் விண்வெளித்துறை உருவாக காரணமாக திகழ்ந்தவர் விக்ரம் சாராபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines  : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
22:22 (IST)12 Aug 2019
கேரள அரசுக்கு நிவாரணம் - ஸ்டாலின் கோரிக்கை

கேரள அரசு நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருக்கின்ற போதிலும், அண்டை மாநில மக்கள் என்கிற முறையில் நாமும், கேரள மக்களுக்கு உதவிட வேண்டும். அரிசி, துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை, அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பிட திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

21:02 (IST)12 Aug 2019
ஸ்டாலின் விளம்பரம் தேடிக்கொள்ள உதகை சென்றுள்ளார் – முதல்வர் பழனிசாமி

உதகையில் மழை பாதிப்புகளை பார்வையிடுவதாக விளம்பரம் தேடச்சென்றுள்ளார் மு.க.ஸ்டாலின்; ஆனால் நாங்கள் பாதிப்புகளை சரி செய்வோம். மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் சேதங்களை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்கப்படும் வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்து மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் என்று கோவை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறினார்.

21:00 (IST)12 Aug 2019
92 அடியை தாண்டியது மேட்டூர் அணை

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் நீர்வரத்து அதிகரிப்பின்  காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.55 அடியை தாண்டியது.  அணைக்கு நீர்வரத்து 2.35 லட்சம் கன அடியில் இருந்து 2.40 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.

20:26 (IST)12 Aug 2019
அத்திவரதரை தரிசித்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

அத்திவரதர் உற்சவம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மக்கள் அதிகளவில் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா எம்.எல்.ஏ. ரோஜா உள்ளிட்டோர் அத்திவரதர் தரிசனம் செய்தனர்.

19:48 (IST)12 Aug 2019
ஒகேனக்கலில் நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரியின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் பகுதி காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளதால், பரிசல் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

19:09 (IST)12 Aug 2019
புதிய சட்டக்கல்லூரிகளை தொடங்க தடை

நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகளை தொடங்க பார் கவுன்சில் ஆஃப் இந்தியா தடை விதித்துள்ளது.

18:33 (IST)12 Aug 2019
ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்

வைகோ - அழகிரி மோதல் குறித்து மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

18:19 (IST)12 Aug 2019
ஆந்திராவில் இருந்து 8 டிஎம்சி தண்ணீர் வழங்க உறுதி

திருப்பதியில் உள்ள தெலுங்கு கங்கை குடிநீர் வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் சென்னை மெட்ரோ கார்ப்பரேஷன் முதன்மை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் தமிழக அதிகாரிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன், ஆந்திர தமிழக குடிநீர் ஒப்பந்தத்தின்படி ஆந்திர அரசு ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டி உள்ளது. அதில் ஜூன் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். தங்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீரை வழங்க ஆந்திர அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் ஆந்திராவில் போதிய மழை இல்லாத நிலையில் கண்டலேறு மற்றும் சோமசீலா அணைகள் வறண்டு காணப்படுவதாகவும், கண்டலேறு அணையில் தண்ணீர் கொண்டு வந்த பிறகு சென்னைக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

17:57 (IST)12 Aug 2019
சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் பூங்கா

சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் இது தொடர்பான இடத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பூங்காவில், மூலிகை மற்றும் அரிய வகை தாவரங்கள் மற்றும் அது தொடர்பான தகவல் மையம், பட்டாம்பூச்சி பூங்கா உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

17:35 (IST)12 Aug 2019
ரஜினியின் கருத்து வருத்தமளிக்கிறது - கார்த்தி சிதம்பரம்

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் கருத்து வருத்தமளிக்கிறது. ரஜினியின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு, இலங்கை பிரச்சினை உள்ளிட்ட மற்ற பொது விஷயங்கள் குறித்தும் ரஜினி விளக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

17:16 (IST)12 Aug 2019
சுதந்திர தின கொண்டாட்டம்!

நாட்டின் 73 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

17:15 (IST)12 Aug 2019
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆலோசனை கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 14வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நீர்வளத்துறை அமைச்சகத்தின் சேவா பவனில் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெறுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்

17:05 (IST)12 Aug 2019
கே. எஸ் அழகிரி வேண்டுகோள்!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் நடிகர் ரஜினியின் ஆதரவு கருத்திற்கு அரசியல் தலைவர்கள் தங்களது கண்ட குரல்களை பதிவிட்டு வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி , மகாபாரதத்தை திரும்பத்திரும்ப படித்து பார்க்குமாறு ரஜினிகாந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

16:53 (IST)12 Aug 2019
ஸ்டாலின் ட்வீட்!
16:52 (IST)12 Aug 2019
மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக   சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மேலும்,  கோவை மற்றும் நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்யும் எனவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

16:33 (IST)12 Aug 2019
மேட்டூ அணை நீர் மட்டம்!

90 அடியை நெருங்குகிறது மேட்டூர் அணை. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.4 அடியாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 2.25 லட்சம் கன அடியிலிருந்து 2.30 லட்சம் கன அடியாக உயர்வு. 

16:25 (IST)12 Aug 2019
ஸ்டாலின் கண்டனம்!

சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுக் குறித்து கண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “ நீட், நெக்ஸ்ட், புதிய கல்விகொள்கை வழியில் தேர்வு கட்டணத்தை உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கிறது பாஜக  அரசு. இது கணடிப்பாக கண்டனத்திற்கு உரியது” என்று கூறியுள்ளார். 

16:19 (IST)12 Aug 2019
ஓபிஎஸ் ஆய்வு!

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நீலகிரியில், மழை பாதித்த இடங்களுக்கு சென்று துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை ஆய்வு செய்கிறார்.    அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பாதிப்பு குறித்து  விசாரித்து ஆறுதல் வழங்க உள்ளார்.  இன்று இரவு அல்லது நாளை காலை ஓபிஎஸ் நீலகிரி புறப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

14:38 (IST)12 Aug 2019
ராகுல் காந்தி நேரில் ஆய்வு.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பாதித்த தனது பாராளுமன்றத் தொகுதியான வயநாடை நேரில் சென்று பார்வையிட்டார் ராகுல் காந்தி .

நிவாரண மையங்களில் நேரில் சென்று ஆய்வு. 

13:24 (IST)12 Aug 2019
மியான்மர் நிலச்சரிவு பலி எண்ணிக்கை உயர்வு.

தென்கிழக்கு மியான்மரில் அமைந்துள்ள பாங் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 56 மக்கள் இறந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரி உறுதிபடுத்தி உள்ளார் .

12:54 (IST)12 Aug 2019
நீலகிரி வெள்ளம் : ரூ. 10 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் - முக ஸ்டாலின்

திமுக தலைவர் முக ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மக்களை சந்தித்து பேசி வருகிறார். அக்கட்சியின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் ரூ.10 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  வெள்ள நிவாரணப்பணிகளை அரசு முடக்கி விட வேண்டும் என்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் விரைவில் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

12:50 (IST)12 Aug 2019
ஜியோவின் ஜிகா ஃபைபர் நெட் கனெக்‌ஷன் - செப்டம்பர் 5 முதல் துவக்கம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது ஆண்டுவிழா நடைபெற்று வருகிறது. ரூ. 700 மதிப்பில் ஜியோவின் ஜிகா ஃபைபர் நெட் செயல்படத்துவங்கும் என்று அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி. ஒரே கேபிளில் இணையம், தொலைபேசி, மற்றும் தொலைக்காட்சி சேவைகளை இதன் மூலம் பெறலாம்.

12:32 (IST)12 Aug 2019
ஆகஸ்ட் 25ல் நடைபெறுகிறது திமுக இளைஞரணி கூட்டம்

வருகின்ற 25ம் தேதி சென்னையில் அமைந்திருக்கும் இல்டன் ஹோட்டலில் திமுகவின் இளைஞரணி மாவட்ட மற்றும் மாநில அமைப்பாளர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12:16 (IST)12 Aug 2019
ரஜினி கருத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பதிலடி

நேற்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் ரஜினி காந்த். காஷ்மீரின் முடிவுகள் குறித்து மத்திய அரசுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அவர் அமித் ஷா மற்றும் மோடியை கிருஷ்ணர் - அர்ஜூனர் என்று அழைத்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷணன் தற்போது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஹிட்லர் - முசோலினி என்று ரஜினி விரைவில் அறிந்து கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

11:55 (IST)12 Aug 2019
பள்ளிகளில் வேளாண் கல்வி

தமிழக பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் வேளாண் கல்வியை ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்று ராஜ்ய சபா உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

11:47 (IST)12 Aug 2019
நீலகிரியில் ஸ்டாலின்

நீலகிரி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை காண நேற்று உதகை விரைந்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின். செல்லும் வழியில் பந்தலூர், மற்றும் கூடலூரில் இருக்கும் மக்களின் பிரச்சனைகளை குறித்து கேட்டு அறிந்தார். தற்போது குருத்துக்குளி மற்றும் கப்பத்தொரை ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

11:29 (IST)12 Aug 2019
ஜம்மு காஷ்மீர் விவகாரம் : தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய கருத்து ஒன்றை பதிவிட்டார். அரசின் இம்முடிவு ஜனநாயத்திற்கு எதிரானது என்று அவர் கூறியிருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் காஷ்மீர் விவகாரம் குறித்து எதுவும் தெரியாத நடிகர் கருத்து தெரிவிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

11:21 (IST)12 Aug 2019
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நூலகம்

மாணவ மாணவிகளின் கற்றல் திறன் மற்றும் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே நூலகங்கள் இருக்கும் பள்ளிகளைத் தவிர பிற மேல்நிலைப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

11:18 (IST)12 Aug 2019
இன்று உலக யானைகள் தினம்

இன்று யானைகள் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. சங்கத்தமிழில் அதிகம் கொண்டாடப்பட்ட ஜீவராசியான இந்த விலங்கினத்தின் பெரும்பான்மையான இனங்கள் அழிக்கப்பட்டு இன்று ஆப்பிரிக்க யானைகள் மற்றூம் ஆசிய யானைகள் மட்டுமே இந்த பூமியில் ஜீவித்து வருகின்றன.

10:44 (IST)12 Aug 2019
நாளை திறக்கப்படுகிறது மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் கொள்ளளவு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து, டெல்டா பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரி பாசன விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து நாளை முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். தற்போது மேட்டூர் அணையின் நீர் வரத்து 2.10 லட்சம் கனஅடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10:14 (IST)12 Aug 2019
மோடி குறித்து ரவீந்திரநாத் குமார் கருத்து

புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி மிகவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். அவருடைய அனைத்து செயல்பாட்டிலும் நான் அவருக்கு ஆதரவாக இருப்பேன் என்று தேனியின் எம்.பி. ரவீந்திரநாத் குமார் பேச்சு.

09:52 (IST)12 Aug 2019
சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டணம் உயர்வு

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டணம் உயர்ந்துள்ளது. பட்டியலின மாணவர்களுக்கு ரூ. 350-ல் இருந்து ரூ.1,200 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ. 750-ல் இருந்து ரூ. 1500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

09:42 (IST)12 Aug 2019
Coimbatore Flood : மங்களூர் - கோவை விரைவு ரயில் சேவையில் மாற்றம்

கேரளா மற்றும் கோவையின் பல்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மங்களூர் மற்றும் கோவைக்கு இடையே இயக்கப்படும் மங்களூர்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் கோழிக்கோடு வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

09:31 (IST)12 Aug 2019
Narendra Modi wishes everyone Eid al-adha

இன்று உலகம் முழுவதும் பக்ரீத்  தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, டெல்லியின் ஜூம்மா மசூதி உட்பட அனைத்து மசூதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தஙக்ளின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டரில் பக்ரித் தினத்தில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இது நம்முடைய சமூகத்தில் அமைதியையும் சந்தோசத்தையும் கொண்டு வரட்டும் என்று கூறியுள்ளார். 

Chennai petrol diesel price : இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவின் Listening, Learning and  Leading என்ற ஆவணப்புத்தகம்  நேற்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உரையாற்றினார்கள். அப்போது காஷ்மீர் குறித்து மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்கதக்கது என்று ரஜினி கூறியுள்ளார். இது தொடர்பான முழுமையான  செய்திகளைப் படிக்க : ”மோடியும் அமித் ஷாவும் அர்ஜூனன்-கிருஷ்ணன் போன்றவர்கள்” – புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி

Web Title:Tamil nadu today news live updates southwest monsoon mettur dam inflow politics vikram sarabhai bakrid

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X