scorecardresearch

TN news updates : தமிழகத்தில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று – மேலும் 23 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

TN news updates : தமிழகத்தில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று – மேலும் 23 பேர் உயிரிழப்பு

வானிலை அறிவிப்பு

Tamil Nadu today news live updates : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24ம் தேதி வரையில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை

கேரளாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து, பூக்கோலமிட்டு, மலையாள மொழி பேசும் மக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23ம் தேதியுடன் நிறைவடைவதால் இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
19:59 (IST) 21 Aug 2021
தமிழகத்தில் புதிதாக 1,652 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.99 லட்சமாக உள்ளது. மேலும் 23 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 34686-ஆக உயர்ந்துள்ளது

18:23 (IST) 21 Aug 2021
ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீடிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வரும் 23ஆம் தேதி முதல் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

100% பணியாளர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட அனுமதி

கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி

17:31 (IST) 21 Aug 2021
நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

http://www.neet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையங்கள் குறித்தும் ஓ.எம்.ஆர் தாளை நிரப்பும் நடைமுறைகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

16:12 (IST) 21 Aug 2021
சென்னை ராமாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளும் தரமற்று கட்டப்பட்டிருப்பதாக புகார்!

சென்னை புளிந்தோப்பு குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளை தொடர்ந்து சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளும் தரமற்று கட்டப்பட்டிருப்பதாக குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

15:58 (IST) 21 Aug 2021
“முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்” – பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம் துவங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த 044-2538 4520, 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

15:53 (IST) 21 Aug 2021
‘சென்னையில் தண்ணீர் தேங்க அதிமுகவின் அவல நிலை ஆட்சி தான் காரணம்’ – தயாநிதி மாறன்

'கடந்த 10 ஆண்டுகளின் அவல நிலை ஆட்சியால்தான், தற்போது சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது' என திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றச்சாட்டியுள்ளார்.

15:19 (IST) 21 Aug 2021
பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை தடுப்பு காவல் சட்டங்களுக்கான அறிவுரைக் கழகம் உறுதி செய்தது!

குண்டர் சட்டத்தை எதிர்த்து மதன் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ள நிலையில், குண்டர் சட்டம் போடப்பட்டதை அறிவுரைக்கழகம் உறுதி செய்துள்ளது.

15:07 (IST) 21 Aug 2021
இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவார் – மத்திய அரசு

ஆப்கானித்தானின் காபூலில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களும் விமான நிலையம் கொண்டுவரப்பட உள்ளனர் எனவும், அவர்கள் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவரப்படுவார்கள் எனவும் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

14:46 (IST) 21 Aug 2021
மேகதாது அணைக்கு எதிராக போராட்டம்: பிரேமலதா, விஜயபிரபாகரன் உள்ளிட்ட 349 பேர் மீது வழக்கு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் உட்பட 349 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

14:18 (IST) 21 Aug 2021
சைகோவ்-டி தடுப்பூசி கொரோனா, டெல்டா வைரஸ்க்கு எதிராக 66% செயல்திறன்

சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசி கொரோனா மற்றும் டெல்டா வைரஸ்க்கு எதிராக 66% செயல்திறன் கொண்டது என சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படும் என்றும் அக்டோபர் முதல் மாதந்தோறும் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

14:16 (IST) 21 Aug 2021
கர்நாடக அரசை கண்டித்து, தேமுதிக டிராக்டர் ஓட்டி போராட்டம்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து டிராக்டர் ஓட்டி போராட்டம் நடத்திய தேமுதிக கட்சியின் பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன் மீது கொரோனா விதிகளை மீறி போராட்டம் நடத்தியதாக ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

13:59 (IST) 21 Aug 2021
ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தகவல்

ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், இந்தியர்களை விரைவில் மீட்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது

13:43 (IST) 21 Aug 2021
தாலிபான்களால் தடுத்து நிறுத்தப்பட்ட சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள்

72 ஆப்கான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் குழு இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தாலிபான்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. காபூலில் இருந்து சுமார் 85 இந்தியர்களுடன் IAF C-130J விமானம் புறப்பட்டது. டெல்லி செல்வதற்கு முன், எரிபொருள் நிரப்புவதற்காக தஜிகிஸ்தானின் துஷான்பேவில் தரையிறங்கியது.

13:26 (IST) 21 Aug 2021
இந்தியர்கள் கடத்தல் – தாலிபான்கள் மறுப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியர்கள் 150 பேர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தாலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது

13:04 (IST) 21 Aug 2021
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12:36 (IST) 21 Aug 2021
ஆவின் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை

சென்னை தலைமை செயலகத்தில் ஆவின் நிறுவனத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.

12:33 (IST) 21 Aug 2021
வழக்கை ரத்து செய்யுங்கள்

தேசியக்கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

12:13 (IST) 21 Aug 2021
காபூலில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்பு

தலிபான்கள் வசம் உள்ள ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இந்திய விமானப்படை விமானம் C-130J மூலம் 85 பேர் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

12:11 (IST) 21 Aug 2021
மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்தது

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தாய்-சேய் நலப்பிரிவில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தாய்-சேய் நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும், குழந்தையும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

11:47 (IST) 21 Aug 2021
ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஆலோசனை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

10:51 (IST) 21 Aug 2021
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது செயல்படும்? முதல்வர் ஆலோசனை

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க திட்டம் உள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் காலை 11 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

10:50 (IST) 21 Aug 2021
weather updates

சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 10 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

10:31 (IST) 21 Aug 2021
18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

09:53 (IST) 21 Aug 2021
டெல்லியில் கனமழை

டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் தொடர் மழை காரணமாக ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

09:21 (IST) 21 Aug 2021
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை அண்ணா நகர், அமைந்தகரை, தியாகராயநகர், அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நிமிடங்களுக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

09:17 (IST) 21 Aug 2021
நடிகை சித்ரா காலமானார்

ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை சித்ரா நேற்று இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 56.

08:56 (IST) 21 Aug 2021
ஓணம் வாழ்த்துகள் தெரிவித்த முதல்வர்

அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளம் ஓணம் திருநாள். மக்களின் அன்பைப் பெற்ற மாவலி மன்னரை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

08:43 (IST) 21 Aug 2021
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் – மாவட்ட ஆட்சியர்

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

08:33 (IST) 21 Aug 2021
12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி

குஜராத்தை தளமாகக் கொண்ட ஜைடஸ் காடிலாவின் மூன்று டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்த வெள்ளிக்கிழமை அன்று அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது இந்தியாவில் இளம் பருவத்தினருக்கு வழங்கப்படும் முதல் தடுப்பூசி ஆகும். மத்திய மருந்து கட்டுப்பாட்டாளர் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய பிறகு, ஜைடஸ் காடிலாவின் ZyCoV-D தடுப்பூசி பிளாஸ்மிட் டிஎன்ஏ மேடையில் உருவாக்கப்பட்ட முதல் கோவிட் தடுப்பூசி வேட்பாளராக உலகில் எங்கும் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

08:29 (IST) 21 Aug 2021
செப்டம்பர் 20 முதல் 30 வரை நாடு தழுவிய போராட்டம்

எரிபொருள் விலையுயர்வு முதற்கொண்டு 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் அடுத்த மாதம் 20 முதல் 30 தேதி வரை நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளது.

08:21 (IST) 21 Aug 2021
பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.47க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 93.84க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

08:15 (IST) 21 Aug 2021
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -உயர்நீதிமன்றம் யோசனை

போலி வேலை வாய்ப்பு நிறுவனங்களிடம் இளைஞர்கள் சென்று ஏமாற்றம் அடைவதை தடுக்க, மத்திய மாநில அரசுகளே வேலை வாய்ப்பினை உருவாக்கி தர வேண்ம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Web Title: Tamil nadu today news live updates weather politics taliban afghan issue

Best of Express