தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்போரிடம் வசூலிக்கப்பட்டும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர்.
இந்த புது விதிமுறையின் படி:
மது அருந்திவிட்டு ஓட்டினால் - 10 ஆயிரம் அபராதம்
ஓட்டுநர் உரிமமம் இல்லாமல் ஓட்டினால் - 5 ஆயிரம் அபராதம்
தலைக்கவசம் அணியாமல் ஓட்டினால் - 1000 மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி இழைப்பு செய்யப்படும்.
பொது சாலைகளில் ரேஸில் ஈடுபட்டால் - 5 ஆயிரம் அபராதம்
இருசக்கர வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றிச் சென்றால் - ரூ. 2 ஆயிரம் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்யப்படும்.
காரில் சீட்பெல்டு அணியாமல் ஓட்டினால் - 1000 அபராதம்
ஓட்டுநர் உரிமத்தை தகுதி இழப்பு செய்த பின்பு வாகனம் ஓட்டுவோரிடம் ரூ. 10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும்.
சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறதலுக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்படுகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் அபராதத் தொகை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உருவாக்கவில்லை. அதை, கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து காவல்துறை அபராதத் தொகையை உயர்த்தியுள்ளது.