புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ்-ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படுகின்றன. இந்தநிலையில், பள்ளி மாணவர்களுக்கான பஸ் பாஸ் குறித்த முக்கிய அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் திறந்த உடனேயே இலவச பஸ் பாஸ் உடனடியாக வழங்க சாத்தியம் இல்லை என்பதால், புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காண்பித்து பயணிக்கலாம். மாணவ, மாணவியருக்கு விரைந்து பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் விவரங்கள் முழுமையாக கிடைத்தவுடன் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். அதுவரை பள்ளி அடையாள அட்டை மற்றும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸ்-ஐப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து பயணம் அனுமதிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் பள்ளி வேலை நாட்களில், இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“