9 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி !

விரைவில் பொள்ளாச்சி டாப்ஸ்லிப் மற்றும் காரமடை எக்கோ டூரிசம் போன்ற பகுதிகளையும் திறக்க மாவட்ட  நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. 

Tamil Nadu Travel and Tourism : Monkey falls opened to visitors after nine months

Travel and Tourism : கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்திருக்கும் நீர் வீழ்ச்சி மற்றும் அணைகளை  பார்வையிட பொதுமக்களுக்கு மார்ச் மாதத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு இடங்களில் சுற்றுலா  தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு பொள்ளாச்சி ஆழியார் அருகே அமைந்திருக்கும் குரங்கு நீர் வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடுவேரியிலும், பவானி சாகர் அணையின் அருகே அமைந்திருக்கும் பூங்காவிலும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.  குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், ஒரே நேரத்தில் 15 நபர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவைக் குற்றாலம் இன்னும் 10 நாட்களுக்குள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இடத்தில் பயணிகள் இறங்கி மீண்டும்  வனத்துறை வாகனத்தில் பயணிக்க வேண்டிய நிலை இருப்பதால் தேவைப்படும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் பொள்ளாச்சி டாப்ஸ்லிப், காரமடை எக்கோ டூரிசம், ஆழியார் அணை பூங்கா போன்ற பகுதிகளையும் திறக்க மாவட்ட  நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.  வால்பாறையின் நல்லமுடி பூஞ்சோலை வ்யூ பாய்ண்ட்டிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu travel and tourism monkey falls opened to visitors after nine months

Next Story
டார்ச் லைட் இல்லை என்றால் கலங்கரை விளக்கமாவோம்: கமல்ஹாசன்Bigg Boss 4 Tamil Kamal Hassan Aari Anita Archana Review Day 13
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express