இதல்லவா சாதனை… கேரள அரசின் சிறப்பு பேருந்தில் சென்ற தமிழக மாணவி பொது தேர்வில் 95%

தேர்வு எழுதப் போக்குவரத்து வசதி இன்றி திண்டாடினார்.

Tamil Nadu tribal girl sridevi : படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த பழங்குடியின மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95% பெற்று அசத்தியுள்ளார். பேருந்து இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் தவித்த இந்த மாணவிக்கு கேரள அரசு சிறப்பு பேருந்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ளது பூச்சுகொட்டாம்பாறை. இங்கு பெரும்பாலும் வசிப்பவர்கள் பழங்குடியின மக்கள் தான். இங்கு பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிப்பதே அரிது. அதிலும் 10 ஆம் வகுப்பு வரை படிப்பது எல்லாம் மிகவும் அரிதான நிகழ்வு. இப்படியொரு சமுதாயத்தில் இருந்து வந்த ஸ்ரீதேவி இன்று 10 ஆம் வகுப்பு தேர்வில் 95% எடுத்து ஒட்டு மொத்த பழங்குடியின சமூகத்தையும் பெருமையடைய செய்துள்ளார்.

ஸ்ரீதேவி,  கேரளாவில் உள்ள சாலக்குடி என்னும் ஊரில் தங்கும் வசதியுடன் உள்ள பள்ளியில் படித்து வந்தார். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஆரம்பித்ததும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.

பின்பு, தேர்வுகள் தொடங்கியதால் ஸ்ரீதேவியால் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. ஊரடங்கால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்ரீதேவி,  தேர்வு எழுதப் போக்குவரத்து வசதி இன்றி திண்டாடினார்.

கொரோனாவை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மோர்.. ஆவினின் புதிய தயாரிப்பு!

இதை அறிந்த கேரள அரசு ஸ்ரீதேவிக்காக மட்டும் சிறப்புப் பேருந்தை இயக்கியது. அந்த பேருந்து மூலம் அவர் பள்ளிக்குச் சென்று மீதமுள்ள தேர்வுகளை எழுதினார். தற்போது வெளியான தேர்வு முடிவுகளின்படி அவர் 95% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதனால், அவருடை பெற்றோர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். அதுமட்டுமில்லை ஸ்ரீதேவியின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். ஏழ்மை நிலையை அறிந்து படிப்பே நம்மை உயர்த்தும் என்று ஸ்ரீதேவி படிப்பில் அதிக கவனத்தை செலுத்தியது உண்மையில் பாராட்ட வேண்டிய செயல்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu tribal girl sridevi scores 95 in public exam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express