நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நள்ளரவில் நடந்த விபத்து குறித்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, கூட்டத்திற்கு திடீரென புகுந்த வேன் மோதி காவலர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கள் மாவட்டம் ராசிபுரம் தேசிய நெருங்சாலையல் ஏ.கே.சமுத்திரம் பகுதியில், சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து மாற்றுப்பாதையில் செல்ல மணல் மூட்டைகள் மற்றும் ட்ரம்கள் வைத்து பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இன்று அதிகாலை மதுரையில் ஒசூர் நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கவனிக்காமல், தட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானர். இநத விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விபத்துக்குள்ளாக காரை அப்புறப்படுத்திவிட்டு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து இளம்பிள்ளை நோக்கி சென்றுகொண்டிருந்த சுற்றலா வேன் ஒன்று போக்குவரத்தை சீரமைத்துக்கொண்டிருந்த காவலர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 காவலர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த காவலர்கள் புதுச்சத்திரம் சிறப்பு உதவி ஆய்வவாளர் சந்திர சேகரன் தலைமைக்காவலர் தேவராஜன் ஆகியோர் என்பது குறி்ப்பிடத்க்கது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில். விபத்தில் காயமடைந்த சுற்றுலா பயணிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விபத்துக்குள்ளான மதுரை கார் பற்றி விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரியில் டிரைவர் குடித்தவிட்டு வந்ததாக கூறி விசாரித்துள்ளனர். அந்த நேரத்தில் தஞ்சாவூர் சுற்றுலா வேன் மோதியதால் காவலர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“