Advertisment

தி.மு.க 43.59%, பா.ஜ.க 7.17%... மாநகராட்சிகளில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள் முழுப் பட்டியல்

ஒட்டுமொத்தமாக 3038 வேட்பாளர்களுக்கு 6,92,829 வாக்குகள் பதிவாகின. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corporation wards party wise votes sharing percentage

Corporation wards party wise votes sharing percentage : தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டப்பட்டது. பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு மண்டலத்தை மொத்தமாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது திமுக. இந்த தேர்தலில், மாநகராட்சி வார்டுகளில் அனைத்து கட்சிகளும் பெற்றிருக்கும் வாக்கு வங்கி என்ன? கடந்த தேர்தல் காலத்தில் இருந்து இது உயர்ந்திருக்கிறதா? மக்கள் மனம் எந்த கட்சியை நாடுகிறது என்பது தொடர்பான தரவுகளை நாம் இந்த கட்டுரையில் காண்போம்.

Advertisment

களம் இறக்கப்பட்ட வேட்பாளர்கள்

21 மாநகராட்சியில் அமைந்திருக்கும் 1374 வார்டுகளில் 57 கட்சிகளைச் சேர்ந்த 11200 பேர் போட்டியிட்டுள்ளனர். சுயேட்சையாக மொத்தம் 3038 வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். அதற்கு அடுத்த படியாக அதிமுக 1363 வேட்பாளர்களை களம் இறக்கியது. திராவிட முன்னேற்றக் கழகம் 1121 வார்டுகளில் தங்களின் வேட்பாளர்களை இறக்கியது. தனித்து நின்று களம் கண்ட பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி முறையே 1134 மற்றும் 1114 வார்டுகளில் வேட்பாளர்களை களம் இறக்கினார்கள். மக்கள் நீதி மய்யம் 671 இடங்களில் நின்றது.

பல்வேறு கட்சிகள் ஒற்ற இலக்க வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டனர். இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி, ஜனதா கட்சி, லோக் தந்த்ரிக் ஜனதா தளம், மக்கள் முன்னேற்ற கட்சி, நாம் இந்தியா நாம் இந்தியர் கட்சி போன்ற கட்சிகள் தலா 1 வார்டுகளில் போட்டியிட்டனர்.

திக்.. திக்.. திருநெல்வேலி.. அல்வா நகரில் அசத்தல் ரிசார்ட் அரசியல்!

10 ஆண்டுகள் கழித்து இறங்கி அடித்த திமுக

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தலைமை வகிக்கும் திமுக 1121 வார்டுகளில் தங்களின் வேட்பாளர்களை களம் இறக்கியது. அதில் 948 பேர் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் மொத்தமாக 35,57,262 (43.59%) வாக்குகளைப் பெற்று முன்னணி பெறுகிறது ஆளும் கட்சி.

இந்திய தேசிய காங்கிரஸ்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய தேசிய கட்சி காங்கிரஸ். இந்த தேர்தலில் 122 இடங்களில் போட்டியிட்டு 73 இடங்களில் வெற்றி பெற்றனர். மொத்தமாக 2,57,881 (3.16%) வாக்குகளை அவர்கள் பெற்றுள்ளனர்.

இடதுசாரி கட்சிகளின் நிலை என்ன?

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ.எம் முறையே 30 மற்றும் 66 வார்டுகளில் போட்டியிட்டனர். சி.பி.ஐ. கட்சி 13 இடங்களில் 47053 வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்தது. சி.பி.ஐ.எம் கட்சி 69565 வாக்குகளைப் பெற்று 24 வார்டுகளில் வெற்றி பெற்றது. மொத்தமாக இவ்விரண்டு கட்சியும் முறையே இந்த தேர்தலில் 71,884 (0.88%) மற்றும் 1,06,990 (1.31%) வாக்குகளைப் பெற்றனர்.

மதிமுக 27 இடங்களில் போட்டியிட்டு 21 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமாக 73827 வாக்குகளைப் பெற்ற அவர்களின் வாக்கு வங்கி (0.90) ஆக உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 11 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றன. மொத்தமாக 22293 வாக்குகளை அவர்கள் பெற்றுள்ளனர். இவர்களின் வாக்கு சதவீதம் 0.27%.

பரிதாப நிலையில் அதிமுக

164 அதிமுக வேட்பாளர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 3,83,971. மொத்தமாக 21 மாநகராட்சியிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 19,61,005. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பெரிய அளவில் பின்னடவை சந்தித்தது அதிமுக. இந்த தேர்தலில் அவர்களின் வாக்கு வங்கி 24.00% ஆக உள்ளது.

அமமுகவிற்கே ஆச்சரியம் அளித்த வாக்காளர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் 879 வேட்பாளர்களை களம் இறக்கியது. ஆனால் அதில் 3 நபர்கள் மட்டுமே மொத்தமாக 7602 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர். அநேக இடங்களில் வெற்றியை நிலை நாட்ட இயலவில்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக 21 மாநகராட்சி வார்டுகளில் இக்கட்சிக்கு பதிவான வாக்குகள் 1,12,653 ஆகும். இவர்களின் வாக்கு விகிதம் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 1.38%.

பாஜகவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த சுயேட்சை வேட்பாளர்கள்

இந்த முறை பல்வேறு வார்டுகளில் பல சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமாக 3038 வேட்பாளர்கள் தனித்து போட்டியிட்டு 73 பேர் அதில் தேர்வும் செய்யப்பட்டுள்ளனர். திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக, காங்கிரஸுக்கு இணையாக இவர்கள் வெற்றியை உறுதி செய்துள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 1,41,897 வாக்குகளைப் பெற ஒட்டுமொத்தமாக 3038 வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் 6,92,829. இந்த தேர்தலில் 8.48% வாக்குகளை இவர்கள் பெற்றுள்ளனர்.

5 லட்சம் வாக்குகளைப் பெற்ற பாஜக

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து நின்று தேர்தலை சந்தித்தது பாஜக. 1134 இடங்களில் 22 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது இக்கட்சி. வெற்றி வேட்பாளர்கள் மொத்தமாக 36807 வாக்குகளை பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் அவர்கள் 5,85,826 வாக்குகளைப் (தபால் வாக்குகள் நீங்கலாக) பெற்று தங்களின் வாக்கு விகிதத்தை 7.17% ஆக வைத்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யத்தின் சரிவு

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 671 இடங்களில் போட்டியிட்டு 1,48,334 (1.82%) வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

நாதக

நாம் தமிழர் கட்சி எந்த வார்டிலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் 1114 வார்டுகளில் போட்டியிட்ட அவர்கள் பெற்ற வாக்குகள் 205392 (2.51%) ஆகும்.

பாமக

பாட்டாளி மக்கள் கட்சி 569 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. அவர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 115741 (1.41%) ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment