தமிழ்நாடு வன்னியகுல க்ஷத்திரிய பொது அறக்கட்டளை மற்றும் வாரியம் தமிழ்நாடு அரசால் நேற்று (ஏப்ரல் 12) மறுசீரமைக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட வாரியப் பொறுப்பாளர்களின் மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து நேற்று மறுசீரமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம். ஜெயராமன் வாரியத்தின் தலைவராகக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.நடராஜன், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏ.அண்ணாதுரை (வேளாண்மை இயக்குநர்), சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சுந்தர் மற்றும் ஆர்.ராஜேந்திரன், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்மன், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமார், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த என்.அஷ்வின்குமார், சேலம் மாவட்டம் ஹஸ்தம்பட்டியைச் சேர்ந்த எஸ்.ஆர்.அண்ணாமலை ஆகியோர் வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகாதேவி ஜெயபால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தி சரயணன் ஆகியோரும் வாரியத்தில் இடம் பெற்றுள்ளனர். டி.ஆர்.ஓ ஆர்.ராஜேந்திரன் உறுப்பினர் செயலாளராக உள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் செயல்பாட்டில் இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“