பாபு ராஜேந்திரன் விழுப்புரம்
குல்ஃபி சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 94 பேர் உடையாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நேரில் சந்தித்த விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூரில் குல்ஃபி சாப்பிட்ட குழந்தைகள் பெரியவர் உள்பட 94 பேர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நல அமைப்புகள் ஒன்று கூடி வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்த அறிந்த விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து சிகிச்சை விவரம் கேட்டறிந்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர், மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்களின் உடனடி சிகிச்சையால் எல்லோரும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து நலம் பெற்று வருகின்றனர். இந்த சந்திப்பின்போது விசிக நிர்வாகிகள் விஜயகுமார், ஜெயச்சந்திரன், சந்துரு உள்ளிட்ட தோழர்களும் டாக்டர் ராஜு அவர்களும் உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“