அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி தவித்த வ.உ.சி கொள்ளுப் பேத்தி: ஓடோடி உதவிய அமைச்சர் மா.சு

Tamilnadu News Update : தமிழக அரசு சார்பில் மெக்டலினுக்கு தனி உதவியாளர் அமைக்கும்படியும் முறையான சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்ப்பட்டுள்ளது.

Tamilnadu News Update : தமிழக அரசு சார்பில் மெக்டலினுக்கு தனி உதவியாளர் அமைக்கும்படியும் முறையான சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்ப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி தவித்த வ.உ.சி கொள்ளுப் பேத்தி: ஓடோடி உதவிய அமைச்சர் மா.சு

VOC Granddaughter positive Covid : இந்திய விடுதலை போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த வீரர்களின் ஒருவர் வ.உ.சிதம்பரனார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர், சுதேசி என்ற நீராவி கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கு பயணம் மேற்கொண்டதால், ஆங்கிலேய அரசால் தேச துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து 1936-ம் ஆண்டு தனது 64-வது வயதில் மரணமடைந்தார்.

Advertisment

வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி மெக்டலின் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் வசித்து வருகிறார் 45 வயதான இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அரசு வழங்கும் ஓய்வூதியம் மெக்டலினுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மெக்டலின் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதை கண்டறிந்தனர். இதனையடுத்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்ட மெக்டலின், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்த தகவலை தெரிந்துகொண்ட மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக, மதுரை ராஜாஜி மருத்துவனை தலைமை மருத்துவரை தொடர்பு கொண்டு மெக்டலினுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசு சார்பில் மெக்டலினுக்கு தனி உதவியாளர் அமைக்கும்படியும் முறையான சிகிச்சை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மெக்டலினுக்கு தனியாக மருத்துவக்குழு ஒன்று அமைச்சப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Advertisment
Advertisements

மேலும் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலரும் மெக்டலினை கவனித்து வரும் நிலையில், அவருக்கு உடலில் சர்க்கரை அளவு அதிகரித்ததால், உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால், சிற்பபு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமூகவலைதளங்களில் செய்தி பரவிய சில நிமிடங்களில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Tamilnadu Covid 19

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: