தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார். இன்று மாலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்திக்கிறார்.
அப்போது, காவிரியில் உரிய நீரை திறந்து விட, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், முல்லை பெரியாறு விவகாரம் குறித்தும் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், காவிரி படுகையில் உள்ள கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 30 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், “தமிழகத்துக்கு தினமும் 51,000 கன அடி தண்ணீர் திறந்து விடுகிறோம். நாங்கள் 30 டி.எம்.சி.அடி தண்ணீரைத் திறந்துவிட்டோம், மேலும் 10 டி.எம்.சி.அடி தண்ணீரைத் திறந்தால், அது சாதாரண பருவமழை ஆண்டில் தமிழகத்தின் ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்யும்.
இந்த விதைப்புப் பருவத்திற்கான அரசின் திட்டங்களைப் பகிர்ந்து கொண்ட சிவக்குமார், மாநிலத்தின் காவிரிப் படுகையில் உள்ள 1,657 குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “தமிழகத்துக்கு ஜூலை 11 முதல் ஜூலை 30 வரை 20 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மைக் குழு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அப்போது எங்கள் அணைகளில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அது செய்யப்படவில்லை. இதுகுறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்தோம்,'' என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“