தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகரி பாரன்ஹீட் குறையாமல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளுக்கு உள்ளே முடங்கி உள்ளனர். குறிப்பாக ஈரோடு, மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் கடுமையாக உள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 22) திங்கட்கிழமை 12 இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அனல் காற்று வீசியது. சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி, நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ், தருமபுரி மற்றும் கரூர் பரமத்தியில் 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகின.
7 இடங்கள் முன்னதாக 40 டிகிரி செல்சியஸைத் தொட்டன. சென்னையின் மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் முறையே அதிகபட்சமாக 36.3 டிகிரி செல்சியஸ் மற்றும் 35.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“