Advertisment

எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னையில் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கை

TN Weather and Precautionary Measures: வடகிழக்கு பருவமழை எந்தெந்த நாட்கள் பெய்யும் என்றும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றிய தொகுப்பு.

author-image
WebDesk
Nov 03, 2022 15:20 IST
எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னையில் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கை

TN Rains

North East Monsoon Precautionary Measures: வடகிழக்கு பருவமழையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் புதன்கிழமை காலை நகரின் சில பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். கனமழை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து மாநில தலைநகரில் உள்ள ரிப்பன் கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

publive-image

செய்தியாளர்களிடம் பேசிய நேரு, அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை சென்னையில் மொத்தம் 205.47 மிமீ மழை பதிவாகியுள்ளது என்றார்.

publive-image

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் புதன்கிழமை காலை ரிப்பன் கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மழைநீர் வடிகால்களால், பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது. திரு.வி.க.நகரில் கடந்த ஆண்டு 17 செ.மீ மழை பதிவான நிலையில், இம்முறை 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 536 மோட்டார் பம்புகளில் 156 தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. உயர் மின் மோட்டார்கள் மூலம் அந்த பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.

ஒரு சில பகுதிகளில் நடந்து வரும் பாலம் கட்டுமானப் பணிகள் காரணமாகவும் தண்ணீர் தேங்குவதாக அமைச்சர் கூறினார். அவசரநிலை ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்கு 169 நிவாரண முகாம்களை அரசு அமைத்துள்ளது என்றார்.

இந்நிலையில், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

மேலும், தென்தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (03 நவம்பர் 2022) கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

(04.11.2022) வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய கூடும். மேலும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

(05.11.2022) சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

(06.11.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

(07.11.2022) திங்கட்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ்  மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ்  மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சிஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழையால் ஏற்படும் நோய்களுக்கு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், 200 மருத்துவ முகாம்கள், நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைக்கப்படும் என, அதிகாரிகள் அறிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu Weather #Chennai #Weather Forecast Report #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment