தமிழகத்தில் கோடைகாலத்தினால் வெயில் மக்களை வாடி வதைப்பது பார்க்கமுடிகிறது. இதனால் மதிய வேளைகளில் வெளியே செல்வதை மக்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் வெயிலைப் பற்றி பேசுவது போல் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியை விமர்சித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: “”நேற்று 105 டிகிரி வெயில். இன்று 108. தாங்க முடியவில்லை”, என்று சென்னை நண்பர்கள் செய்தி அனுப்புகிறார்கள்.
“சூரியன் ஆட்சி உச்சத்தில் இருக்கிறது. காலம் மாறும் அதுவரை சகித்துக் கொள்ளுங்கள்”, என்று நான் ஆறுதல்படுத்துகிறேன்.
வேறென்ன சொல்ல?””, என்று விமர்சித்துள்ளார்.
இதற்கு பதில் கூறும் விதத்தில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனது பதிவில், “108 டிகிரி வெய்யில் மனப்பிறழ்வை உண்டாகும் என்பது நாம் அறியாததல்ல… தாமரை கருகும் வெய்யில்…”, என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil