/tamil-ie/media/media_files/uploads/2022/11/download-88.jpg)
TN Weather
TN Weather: தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது.
மேலும், அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் வானிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் தொடக்கத்திலிருந்தே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இந்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு நோக்கி நகருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அது என்னவென்றால், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்தபின்பு ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே பார்க்கமுடியும் என்றார்.
தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வரும் நாட்களில் நல்ல மழை எதிர்பார்க்கலாம். கொங்கு மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
நவம்பர் 20ஆம் தேதியில் இருந்து, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அது சூறாவளியாகவோ அல்லது தாழ்வு பகுதியாகவோ மாறலாம். இந்த ஆண்டில் மக்களை பெருமளவு தாக்க விருக்கும் பருவமழையை அது அளிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதை பற்றி முழுமையான விவரங்கள் அறிந்து கொள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு சில நாட்கள் தேவைப்படுகிறது, என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.