Tamil Nadu Weather Forecast: கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என வட தமிழகத்தில், நல்ல மழை பெய்து வருகிறது.
இன்னும் கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
3 மாவட்டங்களில் கனமழை
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பிட்ட சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வட தமிழகத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
டேஸ்டி.. ஹெல்தி..! கருவேப்பிலை சாதம் இப்படி செய்து பாருங்க!
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியஸாகவும் இருக்கும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”