Advertisment

Tamil Nadu Weather Updates: சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை

ஜூன் 29-ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். அதற்குப் பிறகு சென்னைக்கு கிடைக்கும் மழை குறையும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Weather Updates

Tamil Nadu Weather forecast Updates: சென்னையில் வடபழனி, அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.

Advertisment

சென்னையைப் பொறுத்தவரை வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்தப் பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸாகவும் பதிவாகும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழ்நாடு வெதர் மேன் நேற்று பதிவிட்டிருந்த முகநூல் பதிவில் இன்றும் மழை இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவில், “இன்றும் மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஜூன் 29-ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். அதற்குப் பிறகு சென்னைக்கு கிடைக்கும் மழை குறையும்.

எப்போதும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கு முன்பு தான் மழை பெய்யும் என்பதை மறந்துவிட வேண்டாம். வெப்ப சலனத்தினால் மழை கிடைக்கிறது. ஜூன்-செப்டம்பரில் வரும் காற்றழுத்த தாழ்வு நிலையினால் நமக்கு மழை இல்லை. 75 சதவீத மழை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கு முன்புதான் கிடைக்கிறது” என அதில் குறிப்பிட்டிருந்தார்.

Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment