சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை , திருவல்லிக்கேணி, வடபழனி, சாலிகிராமம், பட்டினப்பாக்கம், கிண்டி , அடையாறு , மீனம்பாக்கம், அண்ணாசாலை என்று பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் 90 நிமிடங்களில் 65 மி.மீ., மழை பதிவாகியுள்ளது
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் மழை பெய்தது. சில பகுதிகளில் இரவிலும் மழை தொடர்ந்தது.
எஸ்பிஐ ஏடிஎம் கார்டு இருக்கா? அப்ப இந்த ரூல்ஸ் முக்கியமா தெரிஞ்சிருக்கணும்!
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி நேற்று ஒரே நாளில் 65 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதுவும் மாலையில் வெறும் 2 மணி நேரத்தில் இந்த அளவு மழை பெய்துள்ளது. இந்த வருடத்தின் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தி்ல் வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீங்கள் வங்கியின் பங்குகளில் தற்போது முதலீடு செய்யலாமா?
அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் கடலோர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”