Advertisment

Tamil Nadu Weather Updates: ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

Tamil Nadu Weather News: ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு கடலோர மாவட்டங்கள் உட்பட, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Weather Forecast, இன்றைய வானிலை அறிக்கை, Tamil Nadu Weather News

Chennai Weather Forecast, இன்றைய வானிலை அறிக்கை, Tamil Nadu Weather News

Chennai Weather Forecast predicts heavy rain in tamil nadu: தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தை வாட்டும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வங்கக் கடலில் உருவான காற்று சுழற்சி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறும் வாய்ப்பிருப்பதால், தமிழகத்தில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அரபிக் கடலில் உண்டான வாயு புயல் குஜராத்தில் கரையைக் கடந்த பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. ஆனால் வட மாநிலங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.

Chennai Weather Forecast, இன்றைய வானிலை அறிக்கை, Tamil Nadu Weather News Weather News In Tamil: வானிலை

Chennai Weather Forecast: இன்றைய வானிலை அறிக்கை

வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஓரளவு வெப்பம் தணிந்துள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி வலுவடைந்து காற்றழுத்தமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு கடலோர மாவட்டங்கள் உட்பட, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment